பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 385

களில் எழுத்துக் கட்டுரைகளுக்கு அதிகமான இடம் தரப்பெறும். வாய்மொழிக் கட்டுரைப் பயிற்சி நல்ல முறையில் அமைந்தால் எழுத்துக் கட்டுரைகள் சிறந்த முறையில் வளர்ச்சி பெறும்.

பேச்சு நடைக்கும் எழுத்து நடைக்கும் வேறுபாடு உண்டு. பேச்சு நடையில் அதிகக் கட்டுப்பாடு இராது. முழு வாக்கியங்களாக இருக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை ; பல சொற்களின் துணையின்றியே அபிநயங்க ளாலும் முகக்குறிகளாலும் கருத்துக்கள் விளக்கப்பெறும். ஆனல், எழுத்து நடையில் ஒழுங்கும் கட்டுப்பாடும் தேவை. இலக்கண வரம்புக்கு உட்பட்டு, கருத்துக்கள் காரண காரிய முறைப்படி ஒருவிதத் தொடர்புடன் முழு வாக்கியங்களாக அமைவது எழுத்து நடையின் சிறப்பாகும். பேச்சு நடையில் காணப்பெறும் உயிரோட்டமும் உணர்ச்சிப் பெருக்கும் எழுத்து நடையிலும் அமையவேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். திரு. வி. க., மறைமலையடிகள், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் போன்ற பெரியார்களின் பேச்சும் எழுத்தும் கிட்டத்தட்ட ஒரே விதமாக இருக்கும் என்பதை அறிஞர்கள் அடிக்கடிச் சொல்லி மகிழ்வதுண்டு.

பயிற்றும் முறை : கட்டுரைப் பயிற்சிகளைத் தருதலில் ஆசிரியர் இயன்றவரை விதிவருவித்தல் முறையை மேற்கொள்ள வேண்டும். எல்லாவிதமான கட்டுரைப் பயிற்சிகளும் எளிமையிலிருந்து அருமைக்கும், தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றிற்கும், தெளிவிலிருந்து சிக்கலுக்கும், காட்சிப் பொருளிலிருந்து கருத்துப் பொருளுக்கும் சென் ருல் மாணுக்கர் கட்டுரைப் பயிற்சியில் பெரும் பயன் எய்துவர். முறை வல்லார் கட்டுரைப் பயிற்சியின் வளர்ச்சியை மூன்று நிலைகளாகப் பகுத்துப் பேசுவர்.

முதல் நிலை: இந்நிலையில் பயிற்சிகளே மாணுக்கர் பிறர் உதவி கொண்டே எழுதுவர். தொடக்கநிலைப் பள்ளிகளில்

த-26