பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 தமிழ் பயிற்றும் முறை

மூன்று, நான்கு, ஐந்து வகுப்புக்களில் பாடப் புத்தகங்களில் காணப்பெறும் பொருள்கள்பற்றியே எழுத்துப் பயிற்சிகள் நடைபெறும். ஏறக்குறைய பாடப் புத்தகங்களில் வழங்கப் பெறும் மொழி நடையிலேயே எழுத்துப் பயிற்சிகள் அமை யும். இந்நிலை மாணுக்கர்கள் ஒரு பொருளின் இயல்புகளே விளக்கியும் வருணித்தும் எழுதுவதென்பது இயலாத தொன்று. பாடப்புத்தகங்களிலிருந்து தரப்பெறும் பயிற்சிகள் படித்த பாடப்பொருளே மீண்டும் சிந்திக்க வாய்ப்பினை நல்குகின்றன. தமிழ்ப் பாட நூல்களில் காணப்பெறும் பொருள்களோடு சமூகப் பாடம், இயற்கைப் பொருட்பாடம், கைத்தொழில் பாடம் போன்ற பிற பாடங்களிலும் காணப்பெறும் கதைப்பொருள்கள், வேறு எளிய பொருள்கள் ஆகியவற்றையும் கட்டுரைப் பயிற்சிகளாகத் தரலாம். இந்நிலையில் கீழ் வகுப்பு மானுக்கர்களுக்கும் பார்த்து எழுதும் பயிற்சிகளும், சொல்லுவதெழுதும் பயிற்சிகளும் எழுதும் பயிற்சிகளாக அமையும்.

இரண்டாம் நிலை : இந்நிலையில் மாணுக்கர்கள் பிற உதவி களைக் கொண்டு எழுதும் நிலையிலிருந்து படிப்படியாகத் தாமே எழுதும் நிலைக்குச் செல்வர். ஐந்தாம் வகுப்பிலும், முதற்படிவத்திலும் பாடப்புத்தகத்திலிருக்கும் பொருள்கள், அவற்றைச் சிறிது மாற்றியமைத்த பொருள்கள், அவற்றி. லிருந்து தோன்றி எழக்கூடிய பொருள்கள் ஆகியவை பற்றிக் குறிப்புக்கள் கொடுத்துப் படிப்படியாகப் பயிற்சிகளை எழுதச் செய்யலாம். பாடப்புத்தகங்களில் காணப்பெருத, ஆனல் தம் புலன்களால் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் பொருள்களே எழுத்துப் பயிற்சிப் பொருள். களாகக் கொள்ளலாம். இந்நிலை மாணக்கர்களுக்குப் பட்டறிவிற்கு அப்பாற்பட்ட பொருள்களைப்பற்றி எழுதச் சொல்லுதல் மின்கடத்தின் ஒரு கோடியை மட்டும் இணைத்து மின் ஆற்றலை வருவிக்க முயல்வதை ஒக்கும் என்று பேராசிரியர் பாலார்டு கருதுகின்றர். என்னதான் முயன்ருலும் ஒரு கோடியைக்கொண்டு மின் ஆற்றலே வெளிப் படுத்தமுடியாது என்பதைப் போலவே, பட்டறிவிற்கப்பாற்