பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தமிழ் பயிற்றும் முறை

நுகர்தல் மற்ருெரு வகை இதனைப் பெருந்திணை' என்று இலக்கண நூலார் குறிப்பர். மூன்ருவது வகைதான் ‘அன்புடைக் காமம். இது குறிஞ்சி, பாலே, முல்லை மருதம், நெய்தல் என்று ஐந்து திணைகளாகப் பகுத்துப் பேசப் படுவதால் இதனை ஐந்திணை நெறி' என்று குறிப்பிடும் வழக்கமும் உண்டு. திணை என்ற சொல் தமிழில் ஒழுக் கத்தைக் குறிக்கும். ஐந்து திணையிலும் நிகழும் நிகழ்ச்சி களே முறையே புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் என்று பண்டையோர் குறிப்பிட்டனர். இப்படிஐந்து வகையாகப் பிரித்தாலும் கதை போலத் தொடர்ந்து வரும் காதல் வாழ்க்கையில் பல கட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டத்திலும் பல சிறு நிகழ்ச்சிகள் நிகழக் கூடும். அவற்றைத் துறை என்று கூறுவர் இலக்கண நூலார். கிட்டத்தட்ட நானூறு துறைகளே அகப்பொருள் பாடல் களில் காணலாம். காதல் வாழ்க்கையில் படைத்துக் காட்டப்பெறும் தலைவனும் தலைவியும் குறிக்கோள் வாழ்க்கை நடத்தும் புனிதமானவர்கள் , அவர்கள் ஒரு காலத்தில் ஓரிடத்தில் இருக்கக் கூடியவர்கள் அல்லர் ; என்றும் எல்லா விடத்தும் நிரந்தரமாக இருப்பவர்கள். அவர்களேப் பெயர் சுட்டிக் கூறுவது கூடத் தவறு என்று கருதினர் தமிழர்கள். ஆதலால்தான் அகப்பொருள் பாடல்களில் பெயர் சுட்டிக் கூறப்பெறும் மாந்தர்களேக் காண்பதே இல்லை.

புறப்பொருளில் அடங்கிய குறிக்கோள் பொருள்கள் அறம், பொருள், வீடு என்ற மூன்றுமாகும். புறத்தவர்களுக்கு வெளிப்படும்படியான நிகழ்ச்சிகள் நிகழ்வதனல் இது புறம்’ என்று சுட்டப்பெற்றது. அகப்பொருளிலுள்ள திணை துறைகளைப்போலவே புறப்பொருளிலும் திணை, துறைகள் உள்ளன. புறப்பொருளின் திணை, துறைகளே வகுத்துக் கூறுவதில் இரண்டு வகையான கொள்கைகள் உள. அகத்தியம், தொல்காப்பியம் என்ற நூல்கள் புறப் பொருள்களுக்கு ஏழு திணைகள் கூறுகின்றன. அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி,

هي