பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 38.9

சென்று இறுதியில் எழுதுவதன் முயற்சி முற்றிலும் மாணுக்கருடையதாகவே அமைந்து விடும். கீழ் வகுப்புக்களில் வாய்மொழிக் கட்டுரைக்குப் பின்னரே எழுத்துக்கட்டுரைப் பயிற்சி வரவேண்டும். இவ்வாறு அமைந்தால் திருத்தவேண்டிய பிழைகள் அதிகமாகா. எழுத்துக்கட்டுரைப் பயிற்சிகளல்லாத வாய்மொழிக் கட்டுரைகள் அதிகமாக நடத்தப்பெற்ருல் மேல் நிலையில் எழுதப்படுபவை மிகச் சிறப்பாக அமைதல்கூடும். சாதாரணமாகப் பள்ளிகனிலும் கல்லூரிகளிலும் பயிற்சிகளாகத் தரப்பெறும் எழுத்துப் பயிற்சிகளின் வகைகளைப்பற்றி ஒரு சிறிது அறிந்து கொள்வோம்.

எழுத்துப் பயிற்சிகள்

1. கதைக் கட்டுரை : கதைகளே விரும்பாதவரே இல்லை. கதைகள் கற்ருேர்க்கும் மற்றேர்க்கும் இன்பம் அளிக்கின்றன ; சிறந்த உண்மைகளையும் நீதிகளையும் கேட்போர் மனத்தில் பதிக்கத் துணைசெய்கின்றன ; காவி. யத்தைக் கவின்பெறச் செய்ய உதவுகின்றன. கதைகள் பேதையரையும் மேதையராக்கும் பெற்றி வாய்ந்தவை. பாலர் முதல் முதியோர் வரை கதைகளை எல்லோரும் விரும்பி ஏற்கின்றனர். இத்தகைய பேராற்றல் வாய்ந்த கதைகளே எழுது வதில் சிறு வயதிலிருந்தே மாளுக்கர்கட்குப் பயிற்சி அளிக்க வேண்டும். சிறுவர்களுக்குக் கருத்தை ஈர்க்கும் கதைகள் எழுதுவதன் மூலம் சிறந்த மொழிப்பயிற்சியைத் தந்து அவர்களிடம் மொழிவளத்தை எய்துவிக்கலாம். நடுநிலைப் பள்ளிகளில் கீழ் வகுப்புக்கு ஏற்ற பயிற்சியாக இதைக் கொள்ளலாம். கதைக்கட்டுரையில் மூன்றுபடிகளைக்

கொண்ட ஒரு வளர்ச்சி முறையைக் காணலாம்.

முதற்படியில் ஆசிரியர் ஒரு கதையைச் சுருக்கமாகக் கூறுவார்; அல்லது ஒரிரண்டு முறை படித்துக் காட்டுவார். அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் மாணுக்கர்களைத் திரும்பவும் தொடர்ச்சியாகச் சொல்லும்படி ஆசிரியர் ஏவுவார்.