பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 39 f

கதைக்கும் ஏற்றவை. மாணுக்கரின் பட்டறிவு, மொழியறிவு, படிக்கும் வகுப்பு ஆகியவற்றிற்கு ஏற்றவாறு இவை தரப்பெறும்.

2. படக் கட்டுரை : மொழிப் பாடத்தில் படங்களின் பயன்கள் பல இடங்களில் சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைப்பயிற்சியிலும் பாடங்கள் சிறந்ததோர் இடத்தைப் பெறுகின்றன. படங்கள் வாய்மொழிக் கட்டுரைக்கேற்ற பொருள்களையும் குறிப்புக்களையும் நல்குகின்றன. படக் கட்டுரை கதைக் கட்டுரைக்கு அடுத்த நிலையில் அருமை நோக்கி அமைகின்றது. கதைக் கட்டுரையில் மாணுக்கர்கள் படித்த அல்லது கேட்ட கதைகளைச் சுருக்கி ஒழுங்கு படுத்தி எழுதுவர் ; அல்லது சட்டகக் குறிப்புக்களைப் பெருக்கி எழுதுவர். ஆணுல், படக்கட்டுரையில் படத்தில் கானும் காட்சியையோ அல்லது பொதிந்து கிடக்கும் குறிப்புக்களே. யும் விவரங்களையுமோ குறிப்பால் அறிந்து ஒழுங்கு செய்து வகைப்படுத்தி எழுதவேண்டும். இதில் பிறர் உதவி குறைவு ; மாணுக்கர்கள் தாமாக எழுதும் முயற்சியே அதிகம்.

படக் கட்டுரைப் பாடம் நடத்துவதில் மூன்று படிகள் உள்ளன. முதலாவது : ஆசிரியரின் ஆயத்தம். ஆசிரியர் படத்தின் உயிர்நிலை, அதற்கு உதவும் சிறு விவரங்கள் முதலியவற்றைப் படத்தை உற்று நோக்கி எழுதிவைத்துக் கொள்ளவேண்டும். மாணுக்கர்களின் பட்டறிவு, பட அறிவு, பரிவு, சொற்களஞ்சிய அறிவு முதலியவற்றிற்கேற்ற வாறு விளுக்களை ஆயத்தம் செய்து கொள்ளவேண்டும். இவை தெளிவான விளக்கத்திலிருந்து தொடங்கிப் படிப்படி யாகப் படத்தைப்பற்றிய முழு விவரங்களே அறியும் நோக்கத்துடன் வளர்ந்து கொண்டு செல்லும் நிலையில் அமைய வேண்டும்.

இரண்டாவது : ஆசிரியர் மாணுக்கர்கட்குப்படத்தைக் காட்டுதல். படங்களைக் காட்டும்பொழுது மாளுக்கர்கள் அவற்றைப் பார்த்து உற்று நோக்கிப் பல விவரங்களே