பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 தமிழ் பயிற்றும் முறை

அறிவர். படங்கள் அவர்களின் கண்ணேயும் கருத்தையும் ஈர்க்கும் முறையில் இருந்தால், அவர்கள் அதைப்பற்றிய பல விளுக்களே விடுப்பர் , தமக்குள்ளேயே வினவவும் செய்வர். ஆசிரியர் இதற்குப் போதிய அளவு காலம் கொடுக்கவேண். டும் , எக் காரணத்தைக் கொண்டும் ஆசிரியர் குறுக்கிட்டு படத்தை மாணுக்கர்கள் நுகர்தலேக் குலேத்துவிடாமல் அதை வளர்க்கவேண்டும். வகுப்பின் அமைதி குலையும் என்று எண்ணி அதைத் தடுத்துவிடவும் கூடாது.

மூன்ருவது : ஒழுங்கான பேச்சு. சாதாரணமாகப் படத்தைப்பற்றி நிகழும் பேச்சை ஓர் ஒழுங்கான முறையில் கொண்டுசெலுத்துவதே ஆசிரியரின் பொறுப்பாகும். முத லில் படத்தை ஒரு முழுப் பொருளாகப் பார்க்கச் செய்த பிறகு, படத்தின் பகுதிகள் பற்றிய விவரங்களை நோக்குதல் வேண்டும். பிறகு அப்படத்தைப்பற்றிக் கோவையாகவும் தொடர்ச்சியாகவும் வாய்மொழியில் பல விளுக்களின் துணே கொண்டு சொல்லச் செய்யவேண்டும் ; இதைக் கரும்பலகையிலும், எழுதவேண்டும். பத்துப் பதினேந்து வரிகள் எழுதும் அளவு கட்டுரை வளர்ந்தால் போதுமானது பிறகு கரும்பலகையிலுள்ளவற்றை அழித்துவிட்டுக் கட்டுரைப்பயிற்சி ஏடுகளில் அவற்றை எழுதச் செய்யவேண்டும்.

படங்களைக் கொண்டு பல நுட்பமான பயிற்சிகளேயும் ஆயத்தம் செய்ய இயலும் ; அவற்றை மேல் வகுப்பு மாணுக்கர்கட்கும் கொடுக்கலாம். தமிழ்ப்பாட மல்லாத தமிழ் மொழியில் பயிலும் பிற பாடங்களிலும் இவ்வித பயிற்சிகளே அமைக்கலாம் ; இப் பாடங்களே எளிதாகவும் கவர்ச்சி தரும் முறையிலும் கற்பிப்பதற்கு இவை பெரிதும் துணை செய்யும் என்பதற்கு ஐயமில்லை.

3. கடிதம் வரைதல் : கடிதம் வரைதல் பள்ளி வாழ்விலும், பிற்கால வாழ்விலும் ஒர் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் இது மிகவும் வலியுறுத்தப் பெறுகின்றது. வேலை தேடுதற்கேதுவான விண்