பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 898

ணப்பமும் பரிந்துரையும், பேருதியத்திற் கேதுவான வணிக எழுத்துப் போக்குவரவும், பெரு நன்மையை விளேக்கும் முறையீடும் வேண்டுகோளும் கடிதவகைகளே. எண்ணிப் பார்த்தால் கடிதம் என்பது எழுதப்பெறும் பேச்சே என்பது புலனுகும். ஒருவருக்கு முன்பிருந்து திறமையாகவும் தெளிவாகவும் முறையாகவும் இனிமையாகவும் பேசுவதால் பெறும் பயன்களே எல்லாம் தொலைவிலிருந்தே அங்ங்ணம் எழுதுவதாலும் பெறக்கூடும். ஆங்கிலம் போன்ற அயல் மொழியில் கடிதம் வரைதல் ஒரு கலையாக வளர்ந்துள்ளது; இலக்கியத் தன்மையையும் பெற்றுள்ளது. ஜவஹர்லால் நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்களும்', ஆலிவர் கோல்டுஸ்மித் என்பார் சீனத் தத்துவ அறிஞர் நிலையிலிருந்து எழுதிய கடிதங்களும்', டாக்டர் மு. வரதராசனர் எழுதியுள்ள கடிதங்களும் , செந்தில் வேலனுக்குத் திரு. வேங்கடத்தான் எழுதிய கடிதங்களும் போன்றவை இலக்கிய நிலைக்கு உயர்ந்தவை. தமிழில் சீட்டுக் கவிகள் : என வழங்கும் கவிதைகள் யாவும் பாவடிவிலுள்ள கடிதங்களே ; அவை சிறந்த இலக்கியப் பண்புகளுடன் மிளிர்பவை. ஆதலால், அவை இலக்கியம்போற் போற்றப்பட்டு வருகின்றன. எனவே தொடக்க நிலை, நடு நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் மாணுக்கர்கள் தாம் பெறும் எழுத்து வேலையில் கடிதம் எழுதுதலேயும் முக்கியமான உறுப்பாகக் கொள்ளவேண்டும்.

இவ்விடத்தில் 1926-ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் வெளியிடப்பெற்ற கல்வி ஆராய்ச்சிக் குழுவினரால் தயாரிக்கப்பெற்ற ஹாடோ அறிக்கை கூறுவது எண்னிைப்பார்த்தற்குரியது : “ கடிதம் எழுதும் கலையில் இக்

  • Nehru : Letters from a Father to his Daughter. * Oliver Gold Smith : The Citizen of the World.

தம்பிக்கு, தங்கைக்கு, அன்னக்கு , நண்பர்க்கு என்ற புத்தகங்களைக் காண்க.

  • சுப்புரெட்டியார், ந : மணமக்களுக்கு (பார்க்க.)