பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 தமிழ் பயிற்றும் முறை

காலத்துப் பள்ளி மாணுக்கர்களைத் திறமை பெறப் பயிற்றுவித்தலின் இன்றியமையாமையை மிகவும் வற்புறுத்துகின்ருேம். அக் கடிதங்கள் மாணுக்கர்கள் உணர்ந்தறியும் வாழ்க்கை நிலைமைகளினின்றும், அவர்களுடைய பட்டறிவினின்றும் விளைவனவாகவும், குறித்த நோக்கம் கொண்டன வாகவும் இருக்கவேண்டும்...' இன்னுெரு அறிஞர் கூறுவதாவது : மாணுக்கர்கள் தம்முடைய பள்ளி வாழ்வில் விரிவான கட்டுரைகள் எழுதிப் பயிலுவதில் எவ்வளவோ காலம் செலுத்திப் பாடுபடுகின்ருர்களெனினும், பிற்காலத்தில் மிகச் சிலரே அவ்வகைக் கட்டுரைகள் எழுத நேரிடுகின்றது ; ஆணுல், எல்லோருக்குமே எப்பொழுதும் கடிதம் எழுதும் தேவை ஏற்படுகின்றது. பலர் பற்பல கடிதங்கள் எழுதுகின்றனர். அவர்கள் எழுதும் அக்கடிதங்களேச் செவ்வையாக எழுதப் பயிற்றுவித்தல் மிகவும் இன்றியமையாததாகும்.” இந்த இரண்டு கூற்றுக்களையும் சிந்தித்துப் பார்த்தால் கடிதம் வரைதல் பள்ளிகளில் கற்பிக்கவேண்டியதன் இன்றியமையாமையை ஒரளவு நன்கு அறியலாம்.

கடிதங்கள் பலவகைப்படும். அவற்றைத் தனிப்பட்டவர் கடிதங்கள், உறவாடற் கடிதங்கள், தொழில் முறைக் கடிதங்கள் என்று மூன்று விதமாகப் பிரிக்கலாம். கணவன் மனைவிக்கு எழுதுவது, மனேவி கணவனுக்கு எழுதுவது, தந்தை மகனுக்கு எழுதுவது, மகன் தந்தைக்கு எழுதுவது போன்ற நெருங்கிய உறவுமுறைப்பற்றிய செய்திகளைக் கொண்ட கடிதங்கள் முதல்வகையுள் அடங்கும். உற. வினருக்குள் எழுதப்பெறும் கடிதங்கள், நண்பர்களுக்கு எழுதப்பெறும் கடிதங்கள், அழைப்பிதழ்கள், பாராட்டுக் கடிதங்கள், வாழ்த்துக் கடிதங்கள் ஆகியவை இரண்டாவது பகுதியில் அடங்கும். அலுவற் கடிதங்கள், வணிகக்கடிதங்கள், செய்தித்தாளுக்கு எழுதப்பெறும் கடிதங்கள், விடுமுறைக் கடிதங்கள், விண்ணப்பக் கடிதங்கள், முறையிட்டுக் கடிதங்கள் (Written complaint) பரிந்துரைக்

  • ‘Quoted from the Groats ‘Commerce and Correspondence”