பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 395

3514-5séjàsir (Letters of recommendation) obějuloon?” மூன்ருவது வகையுள் அடங்கும்.

ஒவ்வொருவகைக் கடிதத்திற்கும் அதற்கென அமைந்த தனிவடிவமுண்டு. ஆயினும், எல்லாவகைக் கடிதங்களுக்கும் பொதுவான சில கடித உறுப்புக்கள் உள்ளன. அவை தலைப்பு, கொளு, விளி, செய்தி, உறவுத் தொடர் மொழி, கைந்நாட்டு, முகவரி என்பவை. இவற்றுள் விளியும் உறவுத் தொடர் மொழியும் எழுதப்பெறும் கடித வகைக்கேற்ப சிற்சில மரபுச் சொல்லாகவும், சொற்ருெடராகவும் அமையும். பிறவுறுப்புக்கள் வெவ்வேறு சொற்களாலும் சொற்ருெடர்களாலும் அமையினும் ஒவ்வொரு பொது வாய்பாட்டைத் தழுவியவையாகவே இருக்கும். அவை ஒவ்வொன்றையும்பற்றி ஈண்டு சிறிது நோக்குவோம்.

தலைப்பு: எவ்வகைப்பட்ட கடிதமாக இருந்தாலும் அஃது எழுதப்பெற்ற இடமும் நாளும் குறிக்கப்பெறல் வேண்டும். உறவு, நட்பு, வணிகம் முதலியவையற்றி எழுதும் கடிதங்களில் கடிதத்தின் முதற்பக்க வலப்புறமேல் மூலையில் இடம் மேலும், தேதி கீழுமாக எழுதப்பெறல் வேண்டும். விண்ணப்பக் கடிதங்களிலும், முறையீடுகளிலும் நற்சான்றிதழ்களிலும், அவை இறுதிப்பக்க இடப்புறக் கீழ் மூலேயில்தான் குறிக்கப்பெறும். கொளு : தலைப்பிற்குச் சற்று கீழாக இன்னரிடமிருந்து இன்னுருக்கு என்ருே, இன்னர் இன்னுருக்கு எழுதுவது என்ருே செய்தி தொடங்கு. முன் எழுதப்பெறும் முகவரியே இது. உறவாடற் கடிதங்களிலும் வணிகக் கடிதங்களிலும் உள்ள கொளு சுருக்கம்பற்றி கடிதம்விடுப்போரைக் குறியாது கடிதம் விடுக்கப் பெறுவோரை மட்டும் குறிப்பதுண்டு. நண்பருக்கும் அறிமுகமாகாதவருக்கும் எழுதும் உறவாடற் கடிதங்கள் பெறும்பாலும் கொளுவின்றியே அமையும். விளி : கொளுவிற்குக் கீழாக இடப்புறத்தில் தனியாய்க் கடிதம் பெறுவோரை செய்தி எழுதத் தொடங்குமுன் விளிப்பதே விளி எனப்படும். அஃது அவர்களின் தகுதியும் பழமையும் உரிமையும் கருதி