பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.96 தமிழ் பயிற்றும் முறை

விளியை இடத்திற்கேற்றவாறு ஒருமையாகவோ உயர்வுப் பன்மையாகவோ அமைக்கலாம். பெறுவோர் ஒரு குழு. வாகவோ பலராகவோ இருப்பின் பன்மையாக்கலாம். இவ் விளிக்குமுன் அவரவர் தகுதிக்கேற்ற அன்பு வணக்கங்களைக் குறிக்கும் அடைமொழிகளையும் சேர்க்கலாம். செய்தி : இது விளிக்குக் கீழாக வரையப்படுவது. அதன் அளவும் பொருளும் அவ்வக் கடித வகையையும் எழுதுவோரின் கருத்தையும் பொறுத்தவை. செய்தி நீண்டதாகவும் பல கருத்துபற்றியதாகவும் இருந்தால், அதைப் பல பத்திகளாகப் பிரித்து எழுதவேண்டும். இனிய எளிய தெளிவான சிறு வாக்கிய நடையில் செய்தியை அமைக்க வேண்டும். கடித வகையை யொட்டி நடை வேறுபாடு தோன்றலாம். ஒரே முறையில் எழுதவேண்டிய அனைத்தையும் முற்றுப் பெறும்படி எழுதிவிடல் வேண்டும். ஒரு கடிதத்தில் பின்வரைவாக (Post script) வரைவதும், தொடர்ந்து இன்னுெரு கடிதம் வரைவதும் எண்ணுமற் செய்யும் இயல்பையும் ஒழுங்கீனத்தையும் திறமையின்மையையும் காட்டும். அடித்தடித்து எழுதாது, இயன்றவரை நேராகவும் நேர்த்தியாகவும் செவ்வையாகவும் வரையுங் கடிதங்கள் பகைவராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பெறும் , அவர்கள் மனத்தையும் மாற்றக் கூடும். நிறுத்தற் குறியீடுகளைச் சரியாக இட்டு எழுதுதல் வேண்டும். உறவுத் தொடர்மொழி: கடிதம் விடுப்போருக்கும், பெறுவோருக்கும் உள்ள உறவைக் காட்டுவது இது செய்திக்குக் கீழாக வலப்புறத்தில் வரையப்படுவது. கடிதவகைக் கேற்றவாறு இது மாறுபடும். கைந்நாட்டு : உறவுத் தொடர் மொழிக்குக் கீழாக, கடிதம் விடுப்போரின் பெயர் தந்தை பெயரின் முதலெழுத்துடன் தெளிவாக வரையப்படுதல் வேண்டும். அறிமுகம் ஆகாதவருக்கு எழுதும் கடிதங்களில் தெளிவற்ற கைந்நாட்டாக இருந்தால் கைந்நாட்டிற்குக் கீழ் தெளிவாகப் பெயரை எழுதலாம். முகவரி : கடித உறையின் பின்புறத்தில் அல்லது மடித்த கடிதத்தின் மறுபுறத்தில் கடிதம் பெறுவோரின் முழு முகவரியும் தெளிவாய் எழுதப்படல் வேண்டும். அஞ்சற் கடிதமாயினும் ஆள் வாயிலாய்