பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 3.97°

விடுக்கும் கடிதமாயினும் வலப்புற மூலையில் முத்திரை யொட்டற்குரிய இடத்தை விட்டுவிட்டு முகவரியை எழுத

வேண்டும், ஆங்கில முறைப்படி ஆள் பெயர், அலுவல்,

கதவெண், தெரு, ஊர், அஞ்சல் நிலையம், கூற்றம், கோட்டம், மாநிலம், நாடு என்ற வரிசையில் இஃது: அமையும்.

4. உரையாடல் : இருவர் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதுபோல் வரையப்பெறுவதை * உரையாடல் ’ என்று வழங்குவர். இவ்வுரையாடல் உண்மையாய் நடந்ததாகவும் இருக்கலாம் ; கற்பனையாகவும் இருக்கலாம். உரையாட்டு வரைவு கட்டுரை வரைவினும் கடினப் பயிற்சியாகும். மனத்தில் இருவரைப் படைத்துக் கொண்டு. அவர்கள் உரையாடுவதுபோல் நாடகப்பாணியில் உரையாடலை வரைவதற்குக் கற்பனையாற்றலும், காரண காரிய அறிவுத் திறனும், நாடகத் திறமையும் மிகவும் இன்றியமையாதவை. உரையாடல் வரைவதில் தேர்ச்சி பெறும் மானுக்கர் பிற்காலத்தில் சிறந்த புதின ஆசிரியராகவோ நாடக நூலாசிரியராகவோ திகழக் கூடும்.

மாணுக்கர்கள் வரையும் உரையாடல்களின் நடை எளிதாகவும், இனிதாகவும், இயல்பாகவும் இருத்தல் வேண்டும். இலக்கணப் பிழைகள் தலைகாட்டலாகாது. கொச்சை மொழிகளையும், இடக்கர்ச் சொற்களையும், இழி வழக்குகளையும் அகற்றுதல் வேண்டும். மக்கள் அன்ருட வாழ்க்கையில் பேசும் பேச்சுக்களை ஊன்றிக் கவனித்தால் நடை இயல்பாக அமையும். அறிஞர்கள் வரைந்த நாடகங்களையும் புத்தகங்களேயும் படித்தால், வழுக்களற்ற நடை கைவரப் பெறும். இரண்டு அஃறிணைப் பொருள்களிடையே உரையாடல் நிகழ்வதுபோல் கற்பனையாகவும் உரையாடல அமைக்கலாம்.

உரையாடல் வரைவதில் சில இன்றியமையாத குறிப்புக்களைக் கவனித்தல் வேண்டும். உரையாடலிற்குரிய பொருள்களே-மாறுபட்ட கருத்துக்களே-இரு வரிசைகளில்