பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 தமிழ் பயிற்றும் முறை

குறித்துக்கொள்ள வேண்டும். பிறகு அவற்றைக் காரண காரிய முறைப்படி ஒழுங்குபடுத்த வேண்டும். உரையாடலே நிகழ்த்துவதாகக் குறிக்கப்பெறும் இப்பொருள் மாந்தர்க்கு இடப்படும் பெயர் அவ்வக் கருத்திற்கேற்பப் பொருத்தமாயிருத்தல் வேண்டும். உரையாடல் இயல்பாகத் தொடங்கி, இயல்பாகத் தொடர்ந்து, இயல்பாக முடிதல் நன்று; திடுமெனத் தொடங்குதலும் முடிதலும் கூடா. உரையாடுவோரின் கூற்றுக்கள் சுருங்கியிருத்தல் வேண்டும். இயன்ற வரை உரையாடல் படிப்போர்க்கும் கேட்போர்க்கும் இனிமையாகவும் இறுதியில் ஒரு முடிந்த முடிவை உணர்த்துவதாகவும் இருத்தல் நலம்.

உரையாடல் படைப்புரையாக இருக்கலாம். (எ-டு.) ஒர் ஆசிரியருக்கும் அரசியற்கணக்கருக்கும் நிகழ்வது; ஒரு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் நிகழ்வது ; ஓர் உழவனுக்கும் ஒரு கைத்தொழிலாளிக்கும் நிகழ்வது; இரு வழிப்போக்கரிடையே நிகழ்வது-ஆகியவை போன்றவை. உரையாடலைக் கற்பனையாகவும் நிகழும்படி அமைத்து எழுதலாம்': (எ-டு). ஒர் எருதிற்கும் ஒரு குதிரைக்கும் நிகழ்வது , ஒரு வீட்டெலிக்கும் ஒரு காட்டெலிக்கும் நிகழ்வது : ஒரு கழுதைக்கும் ஒரு நாய்க்கும் நிகழ்வது ; ஒர் உரலுக்கும் மத்தளத்திற்கும் நிகழ்வது , ஒரு புத்தகத் திற்கும் செய்தித் தாளுக்கும் நிகழ்வது - ஆகியவை போன்றவை. சொற்போருக்கும் ஏற்ற பொருள்களைப்பற்றியும் கருத்துமாறுபாடுடைய சில பொருள்கள்பற்றியும் உரையாடலே அமைக்கலாம்.

5. கட்டுரைகள் : கட்டுரையைக் கோப்புரை என்ருர் மறைமலை அடிகள். ஒரு பொருளேப்பற்றிப் பல கருத்துக்களே இசைத்துக் கோவைப்பட வரையப்படும் சொற்பெருக்கே கட்டுரையாகும். கட்டுரை பல பத்திகளைக் கொண்ட ஒரு பிண்டம் : பத்திகள் பல வாக்கியங்களைக் கொண்ட

செல்வமும் வறுமையும் ” என்ற கவிமணியின் பாடலை ஈண்டு நினைவு கூர்க. (மலரும் மாலேயும்).