பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 899

சிறு சிறு தொகுதிகள். ஒரு கட்டுரையை எழுதும் முறையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானுல் வாக்கிய அமைப்பு, கட்டுரை அமைப்பு, பத்தியமைப்பு ஆகிய மூன்றையும் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள வேண்டும்.

வாக்கிய அமைப்பு:ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒருமைப்பாடு அமைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கியமும் பத்திக்குப் புதிய கருத்துக்களைத் தரும் பாங்கில் அமைய வேண்டும். ஒவ்வொரு வாக்கியத்திலும் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றும் சேர்ந்திருத்தல் கூடாது. நீண்ட வாக்கியங்களைத் தவிர்க்கக் கூடாதாயினும், சிறு வாக்கியங்களால் எளிய இனிய நடையை அமைத்துக் கருத்தை நேரடியாக விளக்கலாம் என்பதை மாணுக்கர் அறியும்படி செய்தல் வேண்டும். ஒரே விதமான வாக்கியங்களாக இருந்தாலும் நடை நன்றக இராது. தனி வாக்கியம், கலவை வாக்கியம் போன்ற பல்வேறு வாக்கிய வகைகள் ஒரு கட்டுரையில் அமைந்தால் நடையழகு, பொருள் தெளிவு, கருத்தோட்டம் முதலிய பண்புகள் கட்டுரையில் அமைந்து கட்டுரையைச் சிறப்பிக்கும். பல்வேறு வாக்கியவகைகளைப்பற்றி மொழிப் பயிற்சிகள் என்பதன் கீழ் கூறப்பட்டிருப்பனவற்றை ஈண்டு நினைவு கூர்க, இவற்றின் விரிவையும் வாக்கிய அமைப்பைப்பற்றிய சொன் முறை, சொல்லிடையிடு, முதன்மை நிலை, அண்மை நிலை, தெளிவு, பொருள் வலிமை, திட்டம், தகுதி, இனிமை, சுருக்கம், தூய்மை, இசைவு, வாக்கியத்தின் முன்பின் முடிப்புகள், வாக்கியத்தின் அளவு, ஒரு போகு அமைப்பு, உம்மைத் தொடர், வினு, மரபுகள் முதலிய செய்திகளைப்பற்றியும் உரிய நூல்களில் கண்டு கொள்க.

பத் தி ய ைம ப் பு: பத்தியமைப்பு கருத்தடைவுபற்றிய காரண காரியத் தொடர்புடையதேயன்றி அவரவர் விருப்பம் போல செயற்கை முறையில் பிரித்துக்கொள்வதன்று ; அஃது ஒரு முறையை யொட்டி பிரிக்கப்படுகின்றது. ஒரு கதையோ கட்டுரையோ இவ்வாறு பத்திகளாகப் பிரிக்கப்