பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 தமிழ் பயிற்றும் முறை

படாவிடின், பல பக்கங்கள் தொடர்ச்சியாக இருக்குமாகலின், படிப்பவருக்கும் வெறுப்பும் களேப்பும் உண்டாகும்; பொருளே உளங்கொள்ளுதலும் அரிதாகும். படிப்பவருக்கு எளிமையாயிருக்க வேண்டு மென்று கருதியே பத்தி பிரிக்கப்பட்டுள்ளது என்பதை ஆசிரியர் மாளுக்கரின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும்.

ஒரு பத்தியில் பல வாக்கியங்கள் இருக்கும். வாக்கியங்கள் ஒவ்வொன்றும் பொருள் தொடர்பு உடையன வாயிருக்கும். அவ் வெல்லா வாக்கியங்களும் ஒரு கருத்தினே அல்லது ஒரு செய்தியைக் கூறுவனவாக விருக்கும். ஆதலின், ஒரு கருத்தினேக் குறித்த பல வாக்கியங்களின் தொகுதியே பத்தி எனப்படும். ஒரு கதை அல்லது கட்டுரையின் இயல்பிற்கேற்பப் பத்தி பிரிக்கப்படும். கதை அல்லது வரலாறு ஆயின், ஒரு நிகழ்ச்சி முடிந்ததும் புதிய பத்தி தொடங்கப்படும். ஒரு பிராணியைப்பற்றிய கட்டுரையாயின் அதன் பொதுவமைப்பு, உறுப்புக்கள், வாழுமிடம், பழக்கம்-இயல்பு, உணவு, பயன் ஆகியவற்றைப் பற்றிப் பல பத்திகள் பிரிக்கப்படும். ஆதலின், ஒரு பத்தி இத்தனே வாக்கியங்களே உடையதா யிருத்தல் வேண்டும் என்ருவது, இன்ன அளவினதாயிருக்க வேண்டுமென்ருவது நியதி இல்லை. பொருளின் இயல்பிற்குத் தக்கவாறு பத்திகளே வகுத்து எழுதுவதே முறை.

ஒரு பத்தியை மற்ருெரு பத்தியிலிருந்து வேறு பிரித்துக் காட்டற்கு அதைத் தொடங்கும்பொழுது இடப்பக்கத்தில் சிறிது இடம் விட்டுப் புதிதாகத் தொடங்க வேண்டும். இந்த இடம் இதுவரை எழுதிய பத்திகளைப் பற்றி நினைத்து, இனி வரப்போகும் பத்தியைப்பற்றி நினைத்து இவை யிரண்டற்கும் ஒரு தொடர்பை எங்ங்னம் உண்டாக்குவது என்பதைக் கருதுவதற்கான காலத்தையும் இடத்தையும் கேட்போருக்கும் படிப்போருக்கும் தருவதன் அறிகுறியாக இடப்படுகின்றது என்று கொள்ள வேண்டும். எனவே, ஒரு நல்ல பத்தி படிப்போரையும் கேட்போரையும் அவர்களறி