பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 தமிழ் பயிற்றும் முறை

லிருப்பது சிறப்பாகும். பிஞ்சு தோன்றிக் காயாய்ப் பருத்துக் கனியாய்ப் பழுப்பது போலவே, பத்தியின் கருத்தும் முன்பு தோன்றி முறைப்பட வளர்ந்து முடிவில் முதிர்ந்தால் பத்தி சிறப்பாக அமையும்.

பத்தியமைப்பின் மூன்ருவது நெறிமுறை அளவு வேறு பாடு ஆகும். அளவு வேறுபாடு என்பது ஒவ்வொரு பத்தியும் கூறும் பொருளின் தன்மைக்கேற்ப அளவில் சுருங்கியும் விரிந்தும் இருப்பது. இதனைப் பத்தியின் அளவு வேறு. யாடு என்றும் வழங்குவர். ஒரு பத்தி ஒரு வாக்கியத்தி லுைம் அமையலாம் ; பல வாக்கியங்களாலும் அமையலாம். பத்தியின் பேரெல்லையை வரையறைப்படுத்துவது இயலாதெனினும், ஒரு பக்கத்திற்கு மேல் நீளும் பத்தியைப் பல சிறு பத்திகளாகப் பிரித்துக்கொள்வது நன்று வரைவு கடந்து நீட்டுதல் பொருள் மயக்கத்தைப் பயக்கும். ஒரு பத்தியின் இடையில் மேற்கோட் செய்யுள் வருமாயின் அதைத் தனித்து வரைதல் நன்று. செய்யுள் வடிவு கெடாது வரைதல் இன்றியமையாதது. மேற்கோள் செய்யுளின் ஒரே அடி அல்லது அடிப்பகுதியாக விருந்தால் பத்தியோடு சேர்த்து வரைவதால் குற்றமில்லை.

ஒரு கட்டுரையின் பத்திகளே முகவுரைப்பத்தி, மாறு நிலைப்பத்தி, உடற்பத்தி, முடிவுப் பத்தி என்று அறிஞர் வகைப்படுத்திப் பேசுவர். முகவுரைப் பத்தி கட்டுரையைத் தொடங்குவது. முகவுரையிலிருந்து உடலுக்கும், உடலி லிருந்து முடிவிற்கும் அழைத்துச் செல்லும் பத்தி மாறுநிலப் பத்தியாகும். உடற்பத்தி கட்டுரையின் உயிர்நிலக் கருத்தை விளக்குவது. முடிவுப் பத்தியில் கட்டுரை முடிவு பெறும்.

ஒரு பத்தியின் அளவை வரையறை செய்ய இயலா தெனினும், நடுநில உயர்நிலப் பள்ளிகளில் பயிலும் மாணுக்கர்கள் பெரும்பாலும் நெடும்பத்திகள் எழுதுவதை விடக் குறும்பத்திகள் எழுதுவதே முறையாகும் ; நலமுமா