பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 403

கும். அரைமணி நேரத்தில் ஒன்றரைப் பக்க அளவில் பிறர் துணையின்றி மாணுக்கர்களே எழுதும் சிறு கட்டுரைகளில் அல்லது கடிதங்களில் நெடும்பத்திகள் அமைவது முறை யன்று. ஒவ்வொரு புதுக் கருத்துக்கும் புதுப்பத்தி வேண்டியிருப்பதால் ஒவ்வொன்றும் நெடும்பத்தியாயிருப்பது இயல்பன்று எனினும், பத்திகள் எல்லாம் குறுகினவாயிருந்தால் கட்டுரை பார்ப்பதற்கு அழகாயிராது. ஆகையால் வேறுபாடு கருதி ஒரோவழி சற்று நீண்ட நெடும்பத்தி ஒன்றை ஆங்காங்கு இடையிற் செருகுவதால் வேறுபாடு தோன்றிக் கட்டுரையில் படிப்போருக்குக் கவர்ச்சி தோன்றலாம் ; தோன்றும்.

கட்டுரை அமைப்பு : பொதுவாக ஒவ்வ்ொரு கட்டுரை யும் முகவுரை, உடல், முடிவு என்ற முப்பகுதிகளைக் கொண்டிருக்கும்.

முகவுரை பொருத்த முள்ளதாயும், படிப்போரின் கவனத்தை ஈர்க்கக்கூடியதாயும், சிறியதாயும், கட்டுரையின் நோக்கத்தைக் காட்டுவதாயும் அமையவேண்டும். அது படிப்போரைக் கட்டுரையின் உடலுக்குள் அழைத்துக் கொண்டு போவதாயும் இருக்கவேண்டும். எனவே, கட்டுரையின் உடலுக்குச் சட்டகம் அமைத்துக் கொண்டு அதற்கேற்ற தோற்றுவாய் அமைப்பது ஏற்றதாகும். எந்தக் கட்டுரையையும் முகவுரையின்றித் தொடங்குவது முகப்பு இல்லாத மண்டபத்தைத் தொடங்குவது போலாகும். வரலாற்றுக் கட்டுரை, வருணனைக் கட்டுரை போன்றவற்றை முகவுரையின்றியும் தொடங்கலாம். ஆயினும், அங்கும் ஒரு தொடரளவாகவாவது முகவுரை அமைந்தால் கட்டுரை சிறக்கும். எடுத்துக்காட்டாக கம்பரைப் பற்றி வரையும்பொழுது உலக மகா கவிகளுள் ஒருவரான கம்பர் என்னும் தொடர் முகவுரையாக அமையலாம். ஜவஹரைப் பற்றி எழுதும் கட்டுரையில் நமது நாட்டின் திலகமும் மனிதருள் மாணிக்கமுமான என்ற தொடரை முகவுரையாகக் கொள்ளலாம். சில சமயம் ஆளின் பிறப்பு,