பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 தமிழ் பயிற்றும் முறை

இன்சொல், இணைமொழி, மரபுத்தொடர், பழமொழி, அணி மொழி முதலியவை நடையைச் சிறப்பிக்கும். தமிழ்ச்சொல். லிருக்க அயற்சொல்லை வழங்குதல் கூடாது. தெளிவும்: துப்புரவும் : கட்டுரையை இருண்ட மையில் தெளிவாக அடித்தடித்து எழுதாமல் எழுதுதல் நன்று. கூட்டெழுத்துக் களைப் பயன்படுத்துதல் கூடாது. பொருத்த வீதம் : ஒவ்வொரு பொருட்பகுதிக்கும் கருத்திற்கும் ஏற்ப நீட்டியும் சுருக்கியும் எழுதுதல் அவசியம். அளவு மிகாமை : எந்தக் கட்டுரையும் குறித்த அளவுக்குமேல் போகக்கூடாது. அரைத்தாள் பக்கத்தில் நடுநிலைப்பள்ளி மாளுக்கர் ஒரு பக்கமும், உயர்நிலைப் பள்ளி மாணுக்கர் ஒன்றரைப் பக்கமும், இடை நிலை வகுப்பு (Intermediate) மாணுக்கர் இரு பக்கங்களும் கலேயிளேஞர் வகுப்பு (B. A.) மாளுக்கர் மூன்று பக்கங்களும் எழுதுதல் முறையாகும். முடிபு : இது கட்டுரையாளரின் கருத்தை வலியுறுத்த வேண்டும். கட்டுரைப் பொருள் கருத்துச் சிறப்பு, ஏதுவும் சான்றும் கூறல், பிறன்கோள் மறுப்பு, மேற்கோள் காட்டல், எடுத்துக்காட்டுடைமை முதலியவற்ருல் சிறந்து வலியுறும்.

கட்டுரை வகைகள் : கட்டுரைகளைப் பத்து வகையாக அறிஞர்கள் பகுத்துப் பேசுவர். ஒரு பொருளின் வரலாற்றைக் கூறுவது வரலாற்றுக் கட்டுரை. இது வரலாறு, வாழ்க்கை வரலாறு, கதை, நிகழ்ச்சி என்னும் நான்கினுள் ஒன்றுபற்றி வரும். (எ-டு.) இரண்டாம் உலகப் பெரும்

சிலப்பதிகாரவுரை சிறிது உயர்ந்த நடையினது. திருக்குறட் பரிமேலழகர் உரை சொற்செறிவு, பொருட்செறிவு உடையது; திருக்குறள் போன்றே ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டது : திட்பம் மிக்கது. பரிதிமாற் கலைஞர், செல்வகேசவராய முதலியார், கா. நமச்சிவாய முதலியார், டாக்டர் உ. வே. சாமி நாதய்யர், மறைமலையடிகள், திரு. வி. க., க. ப. சந்தோஷம், டாக்டர் சேதுப்பிள்ளை, டாக்டர் மு. வரதராசனர், பேராசிரியர் தெ. பொ. மீளுட்சி சுந்தரஞர், பன்மொழிப் புலவர் வே. வேங்கடராஜுலு ரெட்டியார் ஆகியோர் நடைகளை மாளுக்கர்கள் பின் பற்றலாம்.