பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 40 7

போர், காந்தியடிகள், புலியும் இடைச் சிறுவனும், காசுமீரத் தொல்லை என்பன போன்றவை. ஒரு பொருளே வருணித்துக் கூறுவது வருணனைக் கட்டுரை. இதில் நாடு, நகரம், மலே, ஆறு, கடல், மழை, பருவ காலங்கள், இயற்கையின் அதிசயம் முதலியவற்றைப்பற்றியனவும், புகைவண்டிப் பிரயாணம் போன்ற பிரயாணம்பற்றியனவும், கைத்தொழில் நடைபெறும் முறை முதலியனவற்றைப் பற்றியனவும், புதையுண்ட நகரங்கள், கோவில்கள் முதலியவற்றைப் பற்றியனவும் அடங்கும். (எ-டு) இமயம், ஒரு மழைநாள், ஒரு தேர்தல் காட்சி, மகாபலிபுரச் சிற்பம், கப்பல் பிரயாணம், முத்துக் குளிப்பு என்பன போன்றவை. ஒரு பொருளே விளக்கிக் கூறுவது விளக்கியற் கட்டுரை. ஒரு பழமொழியைக்கொண்டு அதை விளக்கி எழுதுவது போன்ற கட்டுரையாகும் இது. (எ-டு). வானுெலி, மறுமலர்ச்சி, "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் , தற்கால அடிமைத்தனம் என்பன போன்றவை. ஒரு பொருளைப்பற்றிச் சிந்தனை யில் அமிழ்ந்துரைப்பது சிந்தனைக் கட்டுரை. வாய்மை, வீரம், நாட்டுப்பற்று, முயற்சி இவைபோன்ற பண்புகளையும், சமூகம், அரசியல், குடும்பம் இவற்றைத் தழுவிய பொருள்களாகிய செல்வம், வறுமை, குடியாட்சியுரிமை, கல்வி, வாணிகம் முதலியவற்றையும், வேதாந்தம், சமயம் இவற்றைத் தழுவிய பொருள்களைப்பற்றியும் எழுதப்பெறும் கட்டுரைகளைச் சிந்தனைக் கட்டுரை என வழங்குவர். (எ-டு) பழையன கழிதலும் புதியன புகுதலும், நல்வாழ்க்கையே நற்சமயம், பெருந்தகை யார்? என்பன போன்றவை. இல்லாத நிலைமையை இருப்பதாகப் பாவித்து எழுதுவது பாணிப்புக் கட்டுரை. (எ-டு). நீ முதலமைச்சளுல்ை நாட்டிற்கு என்ன நன்மை செய்வாய்? மனிதன் சிரஞ்சீவியாயிருந்தால் என்னென்ன நேர்ந்திருக்கும் ? புலவரெல்லாம் பெருஞ் செல்வரா யிருந்திருப்பின் இலக்கியம் தோன்றி யிருக்குமா? கணவன் கொலையுண்டதையறிந்த கண்ணகி மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் ? என்பன போன்றவை. ஒரு பொருளேத் தருக்கமுறையிற் கூறுவது தருக்கியற்கட்டுரையாகும். (எ-டு). அறிவியலால் தன்மையா 2