பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 409

கெனத் தனிப்பட்ட விதி ஒன்றுமில்லை. எனினும், பொருள் கெடாதவாறு சுருக்கவேண்டியிருப்பதால், கொடுக்கப்பட்ட பகுதியில் உள்ள சொற்களில் மூன்றில் ஒரு பகுதிக்குமேல் சுருக்கம் கொண்டிருத்தலாகாது என்று கொள்ளலாம்.

சுருக்கி வரைதற் பயிற்சி வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது : வாழ்க்கையில் பல வகையில் பயன் படுவது. விரிவுரையாளரும் சொற்பொழிவாளரும் உரை நிகழ்த்தும் பொழுது குறிப்பெடுத்துக்கொள்ள இப் பயிற்சி மிகவும் துணைசெய்கின்றது ; நூலகங்களில் படிப்போர் முக்கிய பொருள்களைச் சுருக்கி வரைந்துகொள்ளப் பயன் படுகின்றது. செய்தித்தாள்களில் பணியாற்றும் நிரூபர்கள், ஆசிரியர்கள், துணையாசிரியர்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் முதலியோர்க்கு இப்பயிற்சி மிகவும் துணை செய்யும் என்பதில் ஐயமில்லை. வருங்கால ஆட்சி முறை, வணிக அலுவலகங்கள், நாடு நகர் ஊர் ஆளும் கழகங்கள், அறங்கூறு அவையவங்கள் முதலிய எல்லாத் துறைகளும் தாய்மொழியில் நடைபெறும் என்ற அறிகுறிகள் தோன்றி வருகின்றன ; மொழியின் அடிப்படையில் மாநிலப் பிரிவு நடைபெறவேண்டும் என்ற அவாவும் நிறைவேறிவிட்டது. எதிர்காலத்தில் இத்தகைய அலுவலகங்களில் பணியாற்றப்போகும் இளைஞர்களுக்கு இப்பயிற்சி பெருந்துணையாக இருக்கும். பள்ளியிலேயே. இப்பயிற்சி கல்வி கற்றலுக்குத் துணையாக உள்ளது. தாய்மொழி வாயிலாகக் கல்வி கற்றல் நடைபெறும் இக்காலத்தில் ஒரு பகுதியைக் கருத்துான்றிப் படித்தற்கும், சொல்லேயும் பொருளையும் குறித்த அளவிற் கணித்தறிவதற்கும், வரைவுப் பயிற்சி தருவதற்கும் இப்பயிற்சி பயன்படுகின்றது.

சுருக்கி வரைதலில் செறிவும் தெளிவும் மிகவும் இன்றியமையாத பண்புகளாகும். சொல்லவேண்டியவற்றை நேராக ஐயம் திரிபுகளின்றி எடுத்துக் கூறவேண்டும்.

  • இன்று இது பெரும்பாலும் நடைமுறைக்கு வந்து கொண்டுள்ளது.