பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 41 so

7. பெருக்கி வரைதல் :-ஒரு வாக்கியத்தை அல்லது கூற்றை ஒரு பகுதியாகவும், ஒரு பத்தியைப் பல பத்திகளுள்ள சிறு கட்டுரையாகவும் விரித்தெழுதுதல் பெருக்கி வரைதல் எனப்படும். இது சுருக்கி வரைதலுக்கு நேர்எதிரான பயிற்சியாகும். புத்தக ஆசிரியருக்கும், சொற். பொழிவாளருக்கும் இப்பயிற்சி பெரிதும் பயன் தரும். ஒரு வாக்கியத்தை அல்லது பழமொழியை ஒரு பத்தியாக விரிக்கும் பயிற்சி கீழ் வகுப்பு மாணுக்கர்கட்கு ஏற்றது : ஒரு பத்தியைக் கட்டுரையாக விரிக்கும் பயிற்சி மேல் வகுப்பு மாளுக்கர்கட்கு ஏற்றது.

பெருக்கி வரைதலிலும் கவனத்திற்குரிய சில விதிகள் உள. அவற்றைப் பின்பற்றினுல் பெருக்கி வரைதல் செம்மையாக அமையும். பெருக்கி வரைய வேண்டும் பொருளே நன்கு சிந்தித்து ஏற்ற தலைப்பு தருதல் வேண்டும். அதற்குப் பிறகு விளக்கம், ஏது, எடுத்துக்காட்டு முதலியவற்ருல் விரிக்க வேண்டும். சேர்க்கும் செய்திகளனைத்தும் மூலப் பொருளையொட்டியே யிருத்தல் வேண்டும். மூலப்பகுதி அணியாயிருப்பின் அதைத் தெளிவான நடையில் விளக்கி வரைதல் வேண்டும். பெரும்பாலும் ஒரு கூற்ருக இருக்கும். மூலப்பகுதி ஒரு படிப்பினே போன்ற முடிபாக இருக்குமா.த. லால், அம் முடியிற்கேற்ற கருத்துக்களே நிரல்பட அமைக்க வேண்டும். மூலப்பகுதி ஒரு பகுதியாக இருப்பின் அதிலுள்ள ஒவ்வோர் உட்கருத்திற்கும் ஒவ்வொரு பத்தியை அமைத்தல் வேண்டும். பெருக்கி வரைதலிலும் முதலில் "கரட்டு வரைவு எழுதி, பிறகு 'செவ்வைப்படி எடுக்கும். முறையைக் கையாளலாம்.

8. பொழிப்புரை வரைதல் :-ஒரு செய்யுளின் பொருளே யெல்லாம் உரைநடையில் திரட்டி வரைவதைப் பொழிப் புரை வரைவு' என்று வழங்குவர். தமிழில் உரைநடைப் பகுதியை விளக்கிவரையும் பயிற்சியை விளக்க நடை வரைவு' என்று குறிப்பிடலாம். தமிழ்க் கட்டுரைப் பயிற்சியில் இவ்வித பொழிப்புரைப் பயிற்சிகள் நடைமுறையில்