கட்டுரைப் பயிற்சி 4 I &
பொருள் போன்ற நுண்பொருள்களே உணரவேண்டும்.
அகராதியை இதற்குத் துணையாக வைத்துக்கொள்ளலாம்.
முற்றும் பொருளுணர்ந்த பிறகு அளவான வாக்கியங்களில் பொழிப்புரையை வரைய வேண்டும். பொருள் தெளிவாக வுள்ள சொற்களே மாற்றவேண்டியதில்லை ; செய்யுட்கே
சிறப்பாகவுள்ள சொற்களையும், சொல் வடிவங்களையும்
மட்டிலும் மாற்றினுல் போதுமானது. பொழிப்புரைக்குப்
புறம்பாக எவ்வித விளக்கங்களும் இருத்தல் கூடாது ;
அனைத்தும் பொழிப்புரையின் கூருகவே அமைந்துவிடல் வேண்டும். செய்யுட்களில் காணப்பெறும் நேர் கூற்றுக்
களே யெல்லாம் அப்படியே பொழிப்புரையில் அமைத்தல் நன்று. ஒரு முறையில் திருத்தமாக எழுத இயலாதவர் கரட்டு வரைவு வரைந்துகொண்டு பிறகு செவ்வைப்படி
எடுக்கவேண்டும்.
9. கருத்துணர் பயிற்சிகள் : எல்லா நிலைகளிலும் கருத்துனர் பயிற்சிகள் நல்ல கட்டுரைப் பயிற்சிகளாக அமையும். செய்யுட் பகுதிகள், உரைநடைப் பகுதிகள், படங்கள், வரை படங்கள் போன்றவற்றைக் கையாண்டு இப்பயிற்சிகளைத் தரலாம். இப்பயிற்சிகளே இரண்டுவிதமாக எழுதச் செய்யலாம். அப்பகுதிகளையோ படங்களையோ மாணுக்கர் களிடம் கொடுத்து சில வினுக்களுக்கு விடைகளெழுதச் செய்யலாம் ; அல்லது அவை குறிக்கும் திரண்ட கருத்தை ஒரு குறிப்பிட்ட அளவில் எழுதத் தூண்டலாம். இப் பயிற்சிகளே வாய்மொழியாகவும் நடத்தலாம் ; எழுத்துப் பயிற்சிகளாகவும் தரலாம். எளிய செய்யுட் பகுதிகள், பேராசிரியர்களின் உரைநடைப் பகுதிகள் ஆகியவற்றி. லிருந்து இத்தகைய பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். இன்று செய்தித் தாள்களில் வெளிவரும் பல்வேறு வகை விளம்பரங்கள் சிறந்த மொழிப் பயிற்சிகளாக பயன். படுத்தத்தக்கவை ; ஆசிரியரே பயிற்சிகளே ஆயத்தம் செய்வதற்கும் இவை முன்மாதிரியாக இருக்கத் தக்கவை.
10. மொழி பெயர்ப்பு : ஒரு மொழியை வளப்படுத்தி உயரச் செய்வதற்குரிய வழிகளுள் மொழி பெயர்த்தலும்