பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-4 14 தமிழ் பயிற்றும் முறை

ஒன்ருகும். அயல் மொழியிலுள்ள சிறந்த நூல்களைத் தம் மொழியில் பெயர்த்தெழுதி இலக்கிய வளத்தைப் பெருக்க மொழி பெயர்ப்பு துணைசெய்யும். பண்டைக்காலத்திலிருந்து மொழி பெயர்ப்பு கையாளப்பட்டு வந்ததென்பதற்குத் தொல்காப்பியம் சான்ருக உள்ளது. வழி நூல்களைப் பற்றிக் கூறவந்த இடத்தில் வழிநூல்கள் நான்கு வகைப் படும் என்று கூறி “மொழி பெயர்த்து அதற்படயாத்தல் 28 என்பதையும் வழி நூல்களில் ஒன்ருக்குகின்றது. புரட்சிக்கவி பாரதியாரும்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் :

என்று மொழிபெயர்ப்பின் இன்றியமையாமையை உணர்த்து கின்ருர். இன்றைய நிலையில் அரசியலறிவு பெற்று அரசியலில் கலந்துகொள்ளவும், உலகச் செய்திகளையும் நாட்டு நடப்பையும் அறிவதற்கும், சட்ட நுட்பங்களே. யுணர்ந்து அறங்கூறு அவையங்களிலும் அலுவல் நிலையங்களிலும் வணிக நிலையங்களிலும் வழக்காடுவதற்கும், ஆங்கிலம் அறியாதாரும் அறிவு பெறுவதற்கும் மொழிபெயர்ப்பு மிகவும் இன்றியமையாத சாதனமாகின்றது. எல்லாப் பாடங்களும் தாய்மொழி வாயிலாகக் கற்பிக்கப் பெறுவதால், மொழி பெயர்ப்பால் பல செய்திகளேத் தாய் மொழிக்கு கொண்டுவர வாய்ப்பு உண்டாகும்.

இன்றும் ஆங்கிலப் படிப்பில் மொழிபெயர்ப்பை ஒரு குறையாகக் கையாண்டு வருகின்றனர். அதில் குறைகள் உண்டு என்று எவ்வளவு வலியுறுத்திக் கூறப்படினும், அம்முறை இன்னும் வழக்கத்திலிருக்கத்தான் செய்கின்றது. அயல் மொழியில் விளங்காத கருத்துப் பொருளேச் சொற்களை யும் சொற்ருெடர்களையும் மொழி பெயர்த்தலால் கூடியவரை

'தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்(து)

அதர்ப்பட யாத்தலோ(டு) அனைமர பினவே,

-தொல்-பொருள் மரபி-நூற்99 (இளம்)