பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 4 15

எளிதில் விளக்கிட முடிகின்றது ; காலம், முயற்சி முதலியவை வீணுகாமல் மாணுக்கர்கள் பொருளே உணர்ந்து கொள்ளுகின்றர் என்பற்கு ஐயம் சிறிதும் இல்லை. மொழி பெயர்க்கப்படும்பொழுது அயல் மொழிச் சொற்கள் மனத்தில் நன்கு பதிந்து அம்மொழியிலும் அறிவு கைவரப்பெறுகின்றது என்று கருதுவதில் உண்மை இல்லாமல் இல்லை.

மொழிபெயர்ப்பில் இருவகை உண்டு. ஒன்று, அயல் மொழியிலிருந்து தாய்மொழியில் பெயர்ப்பது; மற்ருென்று, தாய்மொழியிலிருந்து அயல் மொழியில் பெயர்ப்பது. முன்னதற்குத் தாய்மொழியறிவு அதிகமும், பின்னதற்கு அயல் மொழியறிவு அதிகமும் இருத்தல் வேண்டும். முன்ன தால் பிறமொழிச் செல்வங்கள் தமிழ் மொழிக்கு வரவும், பின் னதால் தாய்மொழியிலுள்ள திருக்குறள், திருவாசகம், கம்ப ராமாயணம் போன்ற கலைச் செல்வங்கள் வெளிநாடுகளில் பரவவும் வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. இன்று ஆங்கில மொழி போன்ற வெளிநாட்டு மொழிகளிலிருந்து எத்தனேயோ அறிவியல்துறைச் செல்வங்களும், வங்காளம், குசராத்தி, மராத்தி, இந்தி முதலிய உள்நாட்டு மொழிகளிலிருந்து எத்தனையோ புதினம் போன்ற புதிய இலக்கிய வகைகளும் மொழிபெயர்க்கப்பெற்று வருகின்றன. முன்ன தைக் கீழ், மேல் வகுப்புக்களிலும், பின்னதை மேல் வகுப்புக்களிலும் கற்பிக்கலாம். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் பெயர்க்கும் பயிற்சிகள் நடைமுறையில் தரப்பெறுவதில்லை. அவசியம் அவை தரப்பெறுதல் வேண்டும்.

மொழி பெயர்ப்பில் நான்கு படிகள் உள்ளன. முதற்படியில் அயல் மொழியிலுள்ள சொற்களும் சொற்ருெடர் களும் கருத்தை யறிவதற்கு மட்டிலும் மொழிபெயர்க்கப் பெறுகின்றன. இரண்டாவது படியில் இவ்வாறு மொழி பெயர்க்கும் பழக்கம் குறைந்து பகுதிகளைப் படிக்கும் பொழுதே சந்தர்ப்பங்களே யொட்டிச் சொற்களின் அல்லது சொற்ருெடர்களின் பொருள்களே அறிந்து கொள்ள முடிகின்றது. மூன்ருவது படியில் இரு மொழியின் வாக்கிய அமைப்புக்களையும், செற்ருெடர் மரபுத் தொடர் நுட்பங்