கட்டுரைப் பயிற்சி 325
பொருளுக்கு இத்தனே, நடைக்கு இத்தனே, பிழையின்மைக்கு இத்தனே, கையெழுத்துக்கு இத்தனே என்று பத்து மதிப்பெண்ணேப் பாகுபாடு செய்துகொண்டு திருத்தும் முறையை அனேவருமே கையாளலாம். இது மாணுக்கர் கள் தம் குறைகளே உணர்ந்து தம் திறமையை வளர்த்துக் கொள்ளத் தூண்டுகோலாகவும் இருக்கும்.
பள்ளிகளில் எழுத்துவேலையற்றிய குறிப்புக்கள்
தொடக்கநிலைப் பள்ளிகளில் : தொடக்கநிலைப் பள்ளிகளில் எழுத்து வேலைக்கெனத் தனியான திட்டம் ஒன்றும் இல்லை. அவர்கள் படித்த புத் தகங்களிலிருந்து சில பொருள்களைப்பற்றியும், பாடப் புத்தகங்களில் காணுதஆணுல், மாணுக்கர்களறிந்த-பொருள்களைப்பற்றியும் ஒரு பத்தி அல்லது இரண்டு பத்திகள் வரையும் பயிற்சிகளைத் தரலாம்.
முதல் வகுப்பில் குழந்தைகள் தாங்கள் படித்த சொற்களேயும், சிறு வாக்கியங்களேயும் கரும்பலகை, படம், மின்னட்டை, பிற சாதனங்கள் ஆகியவற்றில் எழுதியிருப்பனவற் றைப்பார்த்து அதைப்போல் தாமும் எழுதும் முறைகளையும் பழகிக்கொண்டால் போதுமானது. இரண்டாம் வகுப்பில் எழுதுகோலச் சரியான முறையில் பிடிக்கவும், தெளிவாயும், விரைவாயும் எழுதவும் கற்பதை வற்புறுத்த வேண்டும். இவ்வகுப்பில் படித்த பாடங்களில் கேட்கும் வினுக்களுக்கு ஒவ்வொரு வாக்கியத்தில் விடை எழுதும் திறமை வளர்ந்தால் போதுமானது. மூன்ரும் வகுப்பில் மொழிப்பாடப்புத்தகங்களிலிருந்தும் பிற பாடங்களிலிருந்தும் கேட்கப்பெறும் விளுக்களுக்கு இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களில் விடையெழுதும் பயிற்சிகளைத் தரவேண்டும். நான்காம் வகுப்பில் கட்டுரை எழுதும் பயிற்சிக்கு முதற்படியாக சமூக வாழ்க்கைபற்றிய கடிதங்களும், சொந்தக் கடிதங்களும் எழு தும் பயிற்சிகள் தரவேண்டும். இவ் வகுப்பில் ஆண்டின் பிற்பகுதியில் சொந்த அனுபவங்களைப்பற்றிச் சுருக்கமாக வரையும் பயிற்சிகளைத் தரலாம். ஐந்தாம் வகுப்பில் சமூகச்