பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 தமிழ் பயிற்றும் முறை

சார்பாகவும், வாணிகச் சார்பாகவும் சற்று நீண்ட கடிதங்களை எழுதும் பயிற்சிகளேத் தர வேண்டும். ஆண்டின் பிற்பகுதியில் முறையான கட்டுரை எழுதும் பயிற்சிகளைத் தரலாம். மானுக்கர்களறிந்த பொருள்கள் பற்றிய செய்திகளை ஒழுங்காக வகுத்துக்கொண்டு சிறிய அளவில் கட்டுரைகளை எழுதத் தூண்ட வேண்டும். இவ் வகுப்பு மானுக்கர்களுக்கு சிங்கம், யானே போன்ற விலங்குகள் பற்றியும் , அரிசி, மாங்காய், பலாப்பழம், உடை போன்ற பொருள்கள் பற்றியும் ; வீடு, பள்ளி, தோட்டம், விளையாட்டிடம் ஆகிய அறிந்த இடங்கள்பற்றியும் ; அவர்களறித்த சில ஊர்கள் பற்றியும் ; காகிதம் செய்தல், மட்பாண்டம் வனே தல், கூடை முடைதல், உப்பு உண்டாக்கல் போன்ற சிறு தொழில்கள் பற்றியும் , ஊர்ப்பூம்பொழில், ஆற்றங்கரை, சந்தை, புகை வண்டி நிலையம், மலேச் சரிவு போன்ற காட்சிகள்பற்றியும்; மழைநாள் அனுபவம், கோயில், திருவிழா, கடைத்தெருவுக்குப் போய் வருதல் போன்ற நுகர்வுகளைப் பற்றியும் கட்டுரைகள் வரையத் தூண்டலாம். எளிய படங்களைப் பார்த்து கட்டுரை வரையும் பயிற்சிகளும் இவர் களுக்கு ஏற்றவை. ஓநாயும் கொக்கும் , காக்கையும் நீர்க் குடமும்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்பன போன்ற சிறிய கதைகளே எழுதும் பயிற்சிகளையும் தரலாம்.

நடுநிலைப் பள்ளிகளில் : நடுநிலைப் பள்ளி வகுப்புக்களில் மாணுக்கர்கள் ஆற்ற வேண்டிய எழுத்து வேலைகளே மிக முக்கியமானவையாகக் கொள்ள வேண்டும். கட்டுரைகளின் பொருள்கள் மாணுக்கர்களின் வாழ்க்கையை யொட்டியன. வாக இருக்கவேண்டும். மாணுக்கர்கள் தமக்குள்ளே வெளியிடத்தக்கனவாகக் கட்டுரைப் பொருள்கள் அமைந்: தால் அவற்றை அவர்கள் விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் எழுதுவர். சர். ஃபிலிப் என்பாரின் கருத்துப்படி ஒவ்வோர் எழுத்து வேலையும் அதை எழுதுகின்றவர் பிறருக்கோ அல்லது தன் பிற்கால நினைவுக்குத் துணையாகவோ பொருளேத் தெளிவாக உணர்த்தும் நோக்கத்துடன் எழுதவேண்டும். அவர் ஒவ்வொன்றையும் நினைவுப் பதிவு”