பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 427

(Record) செய்தி' அல்லது அறிக்கை” (Message) என்ற இருவகைக்கும் தொகுக்கக்கூடும் என்று கருதுகின்ருர்.'" முன் இயலில் சொல்லப்பெற்ற மொழிப் பயிற்சிகளே இலக்கணப்பாடத்துடன் இணைத்துக் கற்பித்தால் அதல்ை மாளுக்கர்கள் பெறும் மொழியறிவு அவர்களின் பல்வேறு: எழுத்து வேலேகளுக்குப் பெருந்துணையாக இருக்கும். கட்டுரையின் நடை எளிமை, தெளிவு, மரபு பிறழாமை, ஏற்ற இடங்களில் அழுத்தம் ஆகிய பண்புகளைக் கொண்டிருப்பதையே நோக்கமாகக் கொள்ளவேண்டும்.

வகுப்புக்களில் எல்லாத் தலைப்புக்களையும் எழுதுவதைப் பற்றிக் கற்பிக்கும்பொழுது பத்தியமைப்புக்கள், பத்தியின் நல்லியல்புகள், நிறுத்தற் குறிகளிடுதல், கோடிடல் (Underlining) தலைப்பமைத்தல், உள்தலைப்புக்களமைத்தல் போன்ற பல்வேறு வழிவகைகளையும் அவ்வப்பொழுது ஆங்காங்குக் கற்பிக்கலாம்.

உயர்நிலைப் பள்ளிகளில் : தாய்மொழி அல்லது மண்டலமொழி முதல்மொழி நிலையை அடைந்த பிறகு மாணக்கர்களின் எழுத்து வேலைகள் தரத்தில் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். பொருட்போக்கில் விரிந்தும், நடைப்போக்கில் உயர்ந்தும் இருக்க வேண்டும். மேல் வகுப்புக்களில் கூடியவரை இவை மாளுக்கர்களின் படைப்பாற்றல்களே வெளிப்படுத்தும் பான்மையிலும், மாணுக்கர்களின் தனிவீறு வெளிப்படும் முறையிலும் அமைந்தால் நன்று. சுருக்கி வரைதலுடன் கட்டுரைப் பொருள்களைச் சேர்த்து ஒழுங்குபடுத்தி அவற்றைக் காரண காரிய முறைப்படியும், தருக்க முறைப்படியும் எழுதும் வாய்ப்புக்களே அடிக்கடி நல்கலாம். இந் நிலை மாணுக்கர்களிடம் இலக்கியத் திறனுய்வுக் கட்டுரைகளையும் எதிர்பார்க்கலாம்.

இந் நிலை மாணுக்கர்களின் நடை இனிய, எளிய, மரபு நெறி பிறழாத தன்மையுடன் இருக்க வேண்டும். பத்தி

° Sri STGFujsit str "Message and Record” st sår.D. நூலில்.