பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 தமிழ் பயிற்றும் முறை

.யமைப்பு, நிறுத்தற் குறிகளிடுதல், தலைப்புக்கள் கொடுத்தல் போன்ற துறைகளில் உயர்தரப் பயிற்சிகளே எதிர் பார்க்க. லாம். மாளுக்கர்கள் எழுதிய கட்டுரைகளில் நல்லனவற். றைத் தேர்ந்தெடுத்துப் பள்ளி ஆண்டிதழில் வெளியிடலாம்.

மொழி பெயர்ப்புக்குத் தரும் ஆங்கிலப் பகுதிகளின் நடை எளிமையாகவும் நேரியதாகவும் இருக்க வேண்டும். கட்டுரைகளுக்காகத் தேர்ந்தெடுக்கும் பொருள்களைப்பற்றிய பகுதிகளே இதற்கும் ஏற்றவை. இப் பகுதிகளே மாணுக்கர் பயிலும் ஆங்கிலத் துணைப்பாட நூல்களிலிருந்தும் பொறுக்கி எடுக்கலாம். -

உயர்நிலைப் பள்ளி வகுப்புக்களில் அவர்களுடைய

துணைப்பாடப் புத்தகங்களிலிருந்து சில தலைப்புக்களைத்

தேர்ந்தெடுத்து ஒன்றரைப் பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரைகள் வரையும் பயிற்சிகள் தர வேண்டும்.

படைப்பாற்றலுக்கு வழிகோலுதல்

தாய் மொழியில்தான் படைப்பாற்றலே எளிதில் வளர்க்ககலாம். மாணுக்கர்களின் தேவைகள், மனப்பான்மை, கவர்ச்சி ஆகியவற்றிற்கேற்றவாறு மொழிப்பாடங்களைக் கற்பிக்கவேண்டுமானுல், சாதாரணமாகக் கொடுக்கப்பெறும் கட்டுரைப் பயிற்சிகள் மட்டிலும் போதா. நாளிதழ்களிலும், பருவ வெளியீடுகளிலும் வெளிவரும் புதிய இலக்கிய வகைகளேயும் கவிதைகளையும் படிக்கும் மாளுக்கர்களுக்கு அவைகளைப்போல் தாமும் படைக்கவேண்டும் என்ற ஆர்வம் எழுதல் இயல்பு. தாய்மொழியாசிரியர்கள் சிறிது முயற்சி எடுத்து இத் துறையில் தக்க கவனம் செலுத்தில்ை உயர்நிலைப்பள்ளி மாளுக்கர்களிடம் சிறு கட்டுரைகள், சிறு நாடகங்கள், சிறு கதைகள், சிறு சிறு கவிதைகள் முதலிய இலக்கிய வகைகளைத் தாமாகவே எழுதும் ஆற்றலை வளர்த்து விட முடியும். படைப்பாற்றல்களே வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டால் இளம் உள்ளங்கள் பண்பட்டு நல்ல பலனைத் தரக்கூடும். அம் மாணுக்கர்களில் பலர் எதிர்காலத்தில்