பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 429*

சிறந்த சிறுகதைச் செல்வர்களாகவும், புதின ஆசிரியர் களாகவும், கவிஞர்களாகவும் திகழக்கூடும். ஆயிரத்தில் அல்லது இலட்சத்தில் ஒருவராவது பிற்காலத்தில் கம்பன்,

பாரதி போன்ற பெருங் கவிஞளுக விளங்க இடமுண்டு.

எனவே, அதற்கேற்ற அடிப்படையைப் பள்ளியில் போடுவதும், அதற்குவேண்டிய வாய்ப்புக்களைக் கல்வி நிலையங்

களில் தருதலும் அவசியம். பள்ளி இதழ் இத்துறையில் பெருந் தொண்டு புரியும். பள்ளி இதழ்களில் சில மாணுக்

கர்கள் அருமையான கதைகள், கவிதைகள் உரையாடல் கள், கற்பனைக் கட்டுரைகள் எழுதியதை இந் நூலாசிரியர்

நன்கு அறிவார் . எனவே, பள்ளி இதழைப்பற்றி ஒரு சிறிது ஈண்டு கூறுவது இன்றியமையாததாகின்றது.

பள்ளி இதழ்கள் : பல நூல்களிலுள்ள கதைகள், கட்டு

ரைகள் முதலியவற்றைப் படிக்கும்பொழுதும், பல வண்ணப் படங்களே யும் கண்கவர் ஓவியங்களேயும் கண்ணுறும்பொழுதும் அவற்றைப்போல் தாமும் எழுதவேண்டும், வரையவேண்டும் என்ற ஆவல் மாணுக்கர்களிடம் எழுதல் இயல்பு. வாய்ப்புக்கள் தக்கவாறு கொடுக்கப்பெற்ருல் மாணுக்கர்களிடமுள்ள படைப்பாற்றல் நன்கு வளர்ச்சி பெறும். இத்தகைய வாய்ப்புக்களை நல்குவது பள்ளி இதழ். தாய்மொழி உணர்ச்சி மிக்கெழுந்திருக்கும் இக் காலத்தில்: ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி இதழ்கள் தோன்றிப் பணியாற்ற இடம் கொடுத்தல் இன்றியமையாதது.

பள்ளி இதழ்களால் இருவித நன்மைகள் உண்டு, பள்ளியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் செயல் முறைகளையும் பெற்ருேர்களுக்கும் பொது மக்களுக்கும் அறிவித்து அவர்களுடைய ஒத்துழைப்பைப் பெறுவது ஒருவகை. மற்ருெருவகை, மானுக்கர்களிடையே மறைந்து கிடக்கும் படைப்பாற்றல்களைப் பல்வேறு முறைகளில்

அறிவுச் சுடர்' என்ற பெயரில் துறையூர் பெருநிலக் கிழவர் உயர்நிலைப்பள்ளியிலிருந்து 1949, 1950-ஆம் ஆண்டு களில் வெளிவந்த ஆண்டிதழ்களில் இவை வெளியிடப் பெற். றுள்ளன.