பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 O தமிழ் பயிற்றும் முறை

வளர்க்கத் துணைபுரிவது. இன்று நடைமுறையில் பல பள்ளி களில் இவ்வித இதழ்கள் தோற்றுவிக்கப் பெற்றுள்ளன. அச்சிட்ட இதழ்களே வெளியிடுவதற்கு அதற்கென ஆகும் செலவுத் தொகை அதிகமாவதால், சில பள்ளிகளில் ஆண்டிற்கு ஒன்றும், மிகச் சில பெரிய பள்ளிகளில் ஆண்டிற்கு இரண்டுமாக இவை வெளியிடப் பெறுகின்றன. பள்ளி நிகழ்ச்சிகள், ஆண்டு அறிக்கைகள் முதலியவற்ருல் இதழ்களே நிரப்புவதைவிட அவற்றைத்தனியாக வெளி. யிட்டுவிட்டு மாணுக்கர்களின் படைப்பாற்றலுக்கு முதலிடம்தருவதே சிறந்தது. தலைமையாசிரியரும் பிற ஆசிரியர் களும் இவ்வழியில் சிந்தையைச் செலுத்தி ஆவன செய்ய வேண்டும்.

நடைமுறையில் பள்ளிக்கென ஓர் இதழும் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு வகுப்பின் பிரிவுகளுக்கும் ஒவ்வோர் இதழும் இருக்க ஏற்பாடுகள் செய்தால் சிறந்த பலன்களைக் காண இயலும். வகுப்பு இதழ்களே க் கையெழுத்துப் படியாகவே வெளியிடலாம் ; திங்கள் ஒன்றுக்கு ஒர் எண் வீதமும் வெளியிடலாம். இவ்வாறு ஒவ்வொரு வகுப்பிலும் வெளிவரும் இதழ்களிலுள்ள கதைகள், கவிதைகள், கட்டுரைகள், சிறு நாடகங்கள், பிற செய்திகள் ஆகியவற்றுள் நல்லனவற்றைத் தேர்ந்தெடுத்துப் பள்ளி இதழ்களில் வெளியிடலாம். பள்ளி இதழ் அச்சிதழாக இருக்க வேண்டும் ; ஆண்டிற்கு ஒன்று அல்லது இரண்டு எண்களே வசதிக் கேற்றவாறு வெளியிடலாம். தம்முடைய எழுத்தோவியங்கள் அச்சில் வெளிவருவதைக் காணும் மாளுக்கர் களுக்கும் ஏற்படும் இன்பத்திற்கு இணையொன்றில்லை. அந்த இன்பமே அவர்களுடைய படைப்பாற்றல்களேத் துண்டி பன்மடங்கு வளரச் செய்யும். தம்முடைய கருத்தோவியங்கள் எப்படியும் அச்சில் வெளிவரவேண்டும் என்ற உணர்ச்சியால் மாணுக்கர்கள் வகுப்புக்களில் திங்கள்தோறும் வெளிவரும் இதழ்களுக்கு அதிகமான கட்டுரைகளே எழுதுவர். கை யெழுத்துப் படிகளால்தான் ஒவியத் திறன், கதைகளே விளக்க வண்ணப் படங்கள் தீட்டும் திறன், இதழ்களைப் பல்வேறு முறையில் கோலமிட்டுச் சிறப்பிக்கும் திறன்