பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 தமிழ் பயிற்றும் முறை

அவற்றுள் கவிதை இலக்கியங்கள் இன்னும் சிறந்தவை. கவியினிப்புக் கண்ட கலேளுன் வள்ளுவன், என்ளுெருவன், சாந்துணையும் கல்லாதவாறு’ என்று இரங்கியிருத்தலே எண்ணி உணர்க. இலக்கியங்கள் பற்றிய பல செய்திகளைத் திறய்ைவு நூல்களில் கண்டு கொள்க.

சாத்திரங்களே மேனுட்டார் அறிவியல்கள் (Sciences) என்றும், காவியங்களை இலக்கியம் (Literature) என்றும் கூறுவர் ; தமிழில் இவை முறையே நூல் என்றும் ‘பா’ என்றும் வழங்கி வருவனவாகக் கொள்ளலாம். தமிழ் இலக்கிய நூல்கள் பெரும்பாலும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு குறிக்கோட் பொருள்களைக் கூறும். அவற்றை வெளியிடும் முறைகளுள் பல வேறுபாடுகள் உள. சில நூல்கள் அறத்திற்குரிய விதிகளையும் விலக்குகளையும் நேரே நீதியாகப் புலப்படுத்தும் , அவற்றையே சில நூல்கள் உவமைமுகத்தானும் உதாரண முகத்தானும் புலப்படுத்தும்; கதைப்போக்கில் அவற்றையே குறிப்பாகவும் சில நூல்கள் உணர்த்தும். எல்லா நூல்களும் சிறந்தவையே யெனினும், கருத்துக்களை எளிய முறையில் சுவை பயக்கும் பாங்கில், கதைப்போக்கில், காப்பிய வடிவில் கூறும் நூல்களே சிறந். தவை. வட நூலார் காவியத்தை மனேவியின் உரைக்கு இணையாகச் சொல்லுவர். கணவனுக்குத் தனது கருத்தை யறிவிக்கப்புகும் மனைவி, மிக இனிய சொற்களால் மனங். கவரும் முறையில் மெல்ல அறிவித்தலைப் போல, காவியங்கள் உயர்ந்த நீதிகளைச் சொற்பொருள் நயங்களோடு மனங்கவரும் வண்ணம் புலப்படுத்துகின்றன. வனப்பினைப்பற்றிக் கூறவந்த பேராசிரியர் அதனுற் பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர் நிலையதே வனப்பென்னும் பெயர்ப்பகுதி வகையான் ஏற்ப தென்பது' என்று குறிப்பிடுவர். வனப்பு-அழகு. ஒரு மொழியின் வனப்புக்களை அம்மொழியிலுள்ள தொடர்-நிலைச்செய்யுட்களாகிய காப் பியங்களால் அறிந்து கொள்ளலாம். காப்பியங்களைப்போல் வனப்பினேப் புலப்படுத்துவதில் தலைமையுடையன பிறவகை

  • தொல்-செய்யு-நூற். 235 இன் உரை (பேரா).