பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 485

இலக்கியங்களல்ல என்பது ஈண்டு அறிய வேண்டிய தொன்று. இவ்வாறு இலக்கியத்தைப்பற்றிய பல கருத்துக்களே ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இலக்கிய வடிவங்கள் : ஒரு மொழியிலுள்ள இலக்கியங்கள் செய்யுள் வடிவம், உரைநடை வடிவம் என இரு வடிவங்களில் அமையும். தமிழ்மொழியிலுள்ள இலக்கியங்களும் பா வடிவமாகவும் உள்ளன ; உரை நடையாகவும் உள்ளன . இவ்விருவகை வடிவங்களின் தோற்றம், வளர்ச்சி, அவற்றிடம் காணப்பெறும் வேற்றுமைகள் முதலியவற்றைத் தமிழ்மொழியாசிரியர்கள் ஒருவாறு பொதுப் பட உணர்ந்திருத்தல் இன்றியமையாதது.*

இன்று செய்யுள் ' என்னும் பெயரால் வழங்கும் நூல்கள் வேறு ; தொல்காப்பியர் காலத்தில் அத்தொடரால் வழங்கிய நூல்கள் வேறு. இன்று பாவையும் செய்யுளையும் ஒரு பொருள் குறித்த சொற்களாகவே வழங்குகின்ருேம். தொல்காப்பியர் காலத்தில் செய்யப்படுவன எல்லாம். * செய்யுள் என்ற பெயரால் வழங்கப்பெற்றன. உரை, பாட்டு, நூல் ஆகிய மூன்றுமே செய்யுள்’ என்ற சொல்லால் உணர்த்தப் பெற்றன. செய்யுளியலின் முதல் நூற்பாவில் கூறப்பெறும் மாத்திரை, எழுத்தியல், அசை முதலிய முப்பத்துநான்கினைக் கொண்டன வெல்லாம் செய்யுட்கு உறுப்பாகும் என்று கூறியிருத்தலேக் காண்க. பா என்பதும் செய்யுள் உறுப்புக்களில் ஒன்ருகும்.

தமிழ்ச்செய்யுளைத் தொல்காப்பியர் ஏழுவகையாகப்

.பிரித்துப் பேசுவர். அவை பாட்டு, உரை, நூல், வாய் மொழி, பிசி, அங்கதம், முதுச்சொல் என்பன. அவற்றை,

பாட்டுடை நூலே வாய்மொழி பிசியே அங்கத முதுச்சொல்லோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்

4. முழுவிவரங்களை இலக்கண இலக்கிய வரலாற்று நூல்களில் கண்டு தெளிக.