பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 தமிழ் பயிற்றும் முறை

நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மஞர் புலவர்."

என்ற நூற்பாவால் அறியலாம். இந்த ஏழுவகைச் செய். யுள்களையும் ஆசிரியர் அடிவரையறை உள்ளன, அடிவரை. யறை இல்லன என்று இரு பிரிவாகவும் பிரித்துக் காட்டுவர், அடிவரையறை உள்ளனவற்றில் பாக்கள் யாவும் அடங். கும்; அடிவரையறை இல்லனவற்றில் நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு என்ற ஆறும் அடங்கும்." இவை ஒவ்வொன்றையும்பற்றி ஆண்டுக் கண்டு கொள்க. நாளடைவில் செய்யுள்’ என்ற சொல் பொருளால் சுருங்கிக்கொண்டே வந்து இன்று பாச் செய்யுள் ஒன்றையே: குறிக்கின்றது. தமிழாசிரியர்கள் பாச் செய்யுள், உரைச் செய்யுள் ஆகியவற்றைக் குறித்தும், அவற்றின் நடை வேற்றுமை குறித்தும் ஓரளவு அறிந்துகொள்ளுதல் இன்றி யமையாதது.

பா நடையும் உரை நடையும் : எம் மொழியிலும் பாட நடையே உரை நடைக்கு முற்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இலக்கிய நடைகளில் அடிவரையறையுற்று நடக்கும் பா நடையே மிகவும்: தொன்மை வாய்ந்தது. செறிவு வாய்ந்த செய்யுள் நடையே சிறந்த கருத்துக்களே நினைவில் வைத்துக்கொள்வதற்கு ஏற்றது. ஆராய்ச்சி செய்யும் அறிவியல் முறைகள் ஏற்படாத அக்காலத்து இயற்கைப் பொருள்களைத் துருவி ஆராய்ந்து அவற்றின் உறுப்புக்களே அலசிப்பார்க்காது கற்பஐனயையே துணையாகக்கொண்டு மக்கள் தம் மனக்கண் ளுல் அவற்றைக் கண்டு வந்தனர். காரணகாரிய முறை அவர்களிடத்து அமையவில்லை ; ஆதலால் அதனே விளக்கி விரித்து ஆராய்ந்து கூறும் உரைநடையும் தோன்றவில்லை. எனவே, அக்காலத்தில் மக்கள் தாம் கூறவேண்டிய அனைத்தையும் செய்யுள் வடிவிலேயே கூறினர். கதைகளையும் பா வடிவில் அமைத்தனர் ; கடவுளேப்பற்றிய

தொல்-செய்யுளி. நூற்-75 (இளம்).

தொல்.செய்யுளி. நூற்-156, 157 (இளம்).