பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்மொழியைப் பயிற்றும் நோக்கங்கள் 21

ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலி நீர் ஞாலத்து இருள்கடியும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிர் ஒன்று; ஏனையது தன்னேர் இலாத தமிழ். '

என்று கூறுகின்ருர். இச் செய்யுள் பகலவனுக்கும் தமிழுக்கும் சிலேடையாய் அமைந்திருக்கின்றது. பிறிதொரு :புலவர்,

பொருப்பிலே பிறந்து, தென்னன்

புகழிலே கிடந்து, சங்கத்து இருப்பிலே இருந்து, வையை

ஏட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று, கற்ருேர்

நினைவிலே நடந்துஓர் ஏன மருப்பிலே பீயின்ற பாவை

மருங்கிலே வளரு கின்ருள்."

என்று பாடுகின் ருர். இச் செய்யுளில் தமிழை ஒரு குழந்தை :யாக உருவகித்து அதன் வளர்ச்சியை முறையே காட்டி யிருப்பது அறிந்து இன்புறத்தக்கது. தமிழ் விடு தூது ' என்னும் நூலில் தமிழின் சிறப்பு விரிவாகக் கூறப்பட் இள்ளது. அந்நூலாசிரியர்,

தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான முத்திக் கனியே!என் முத்தமிழே!-புத்திக்குள்

உண்ணப் படுந்தேனே 118

என்று தமிழைக் குழைந்து போற்றுவதைக் காண்க.

தண்டி-மேற்கோள். (வேற்றுமையணி-பொருள்

வேற்றுமை )

வில்லிபாரதம்-சிறப்புப்பாயிரம்-1 (வரந்தருவார்)

தமிழ்விடு தூது-கண்ணி 89, 70