பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 தமிழ் பயிற்றும் முறை

சொற்செறிவு, பொருட்டெளிவு, இசை நலம், அணி நலம் முதலிய நல்லியல்புகள் அமைய, கருதிய பொருள்மேல் பல சொற்களைத் தொடுத்து அமைப்பதுவே செய்யுள் நடை யாகும். ஒரு பொருள்மேல் பல சொல் கொணர்ந்து ஈட்டல் செய்யுள் செய்தல் என்றும், பல சொல் தொடர்ந்து பொருள் காட்டுவனவற்றுள் ஒசை தழுவியவற்றைப் பாட்டென்ன லாம் என்றும் உரையாசிரியர்கள் கருதுகின்றனர். செய்யுள் நடைக்குள் புகாத நிலையில் மக்கள் பொதுவாகப் பேசும்மொழி உரை நடையாகும். கற்றவர்களும் மற்றவர்களும் எளிதில் பொருள் உணர்ந்து கொள்ளக்கூடியதாய் செய்யுள் நடையினின்றும் வேறுபட்டு அன்ருட வாழ்க்கையில் நாம் பேசிப் பயின்று வரும் நடையை உரைநடை என்னலாம். அஃது உரைத்துப் போதலின் உரையும், தேங்கி நிற்காமல் நடந்து போதலின் கடையும் ஆயிற்று. இலத்தீன் மொழியி. லுள்ள Oratio Pedestris என்ற தொடர் தமிழிலுள்ள பேச்சு நடை என்ற தொடரோடு ஒப்பிடத்தக்கதாக உள்ளது. அன்றியும்,

பூவரு மழலை யன்னம்

புனைமடப் பிடியென் றின்ன தேவரு மருளத் தக்க

செலவின எனினும் தேறேன் ; பாவரும் கிழமைத் தொன்மைப்

பருணிதல் தொடுத்த பத்தி நாவருங் கிளவிச் செவ்வி

நடைவரு நடையள் நல்லோய்'

என்று கம்ப நாடன் கூறும் காப்பிய நடையுடனும் இதை ஒப்பிடுக.

இரு கடைகளுக்குமுள்ள அடிப்படை வேற்றுமைகள் : பா நடை, செறிவும் சுருக்கமும் கொண்டது; உரை நடை நெகிழ்ச்சியும் பெருக்கமும் கொண்டது. முன்னது,

  • சீதையின் நடையழகினை இராமன் அதுமனுக்கு உணர்த்தியவாறு. (கிட்கிந் - நாடவிட் - 64.)