பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 489

கற்பனையை அடிப்படையாகக்கொண்டு காரணகாரியத்தொடர்பைக் கவனியாது பொருள்களே முழுப் பொருள்களாகத் தொகுத்துக் கண்டு அழகினை வியப்பது. இதற்கு அடிவரையறையும் உண்டு. இஃது எதுகை, மோனே முதலிய தொடை நலங்களும் அணி நலங்களும் கொண்டது; யாப்பு இலக்கணத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பது , உளச்சுவைகளேயும், உணர்ச்சிகளையும், மனவெழுச்சிகளையும் மெய்ப்பாடுகளையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டிருப்பது ; படித்துச் சுவைக்கவும், முருகுணர்ச்சியை வளர்க்கவும் துணைபுரிவது. பின்னது ஆராய்ச்சி, காரணகாரியத் தொடர்பு, அனுமானம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது , பொருள்களே ஆராய்ந்து வகுத்துப் பார்ப்பது. அடிவரையறை இதற்கு இல்லை ; எதுகை மோனே முதலிய தொடை நலங்களும் அணி நலங்களும் இதற்கு வேண்டுவதில்லை ; யாப்பிலக்கணத்துக்கும் இது கட்டுப்படாது. பல கலைகளையும் விரித்துரைப்பதால், இன்பத்துக்கு மட்டுமன்றி அறிவு வளர்ச்சிக்கே மிகவும் பயன்படுகின்றது. - -

"முழுமுதற் கடவு ளுண்டென்பதனே விளங்க அறிவித்தற்குரிய அறிவு நிலையும், பின் அதளுேடு வேறறக்கலந்து நின்று இன்புறுதற்குரிய உணர்வு நிலையும் என். னும் இருதிற நிலையினையும் உயிர்களுக்கு முறுகுவித்துப் பின் அவ்வறிவு நிலையினையும் கழலச் செய்து தூய அன்புருவாய் விளங்கும் உணர்வு நிலையை நிலைபேருக் குவித்து உயிர்களுக்கு அளந்தறியப்படாத பெரும் பயனைத் தருதற்கு இன்றியமையாக் கருவியாவது தான் பாட்டென்பது. அற்றேல், உரையும் செய்யுளும் என்னும் இரண்டனுள் உரையும் அவ்விருதிற நிலையையும் முறுகுவித்துப் பயன்றருமாதலின் செய்யுள் மாத்திரமே அதனைப் பயக்குமென்றுரை கூறியதென்னேயெனின் : பால் கறந்த மாத்திரையே யுண்பார்க்குச் சுவை பயக்குமாயினும், அதனே வற்றக் காய்ச்சிக் கட்டியாகத் திரட்டிப் பின்னுண்பார்க்குக் கழிபெருஞ் சுவை தருதல் போலவும், முற்றின கருப்பங்