பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 தமிழ் பயிற்றும் முறை

கழியை நறுக்கிப் பிழிந்த மாத்திரையே அதன் சாற்றைப் பருகுவார்க்கு அஃதினிமை விளக்குமாயினும் மேலும் அதனைப் பாகுதிரளக் காய்ச்சிச் சருக்கரைக் கட்டியாக எடுத்துண்பார்க்கு ஆற்றவும் பேரினிமை பயத்தல் போலவும், உரையும் நலம் பயப்ப தொன்றேயாயினும் அதனேக் காட்டிலும் செய்யுளாற் பெறப்படும் பயன் சாலவும் பெரிதாம். கறந்த பால் நீராளமாய் நெகிழ்ந்திருத்தலின் அதன்கண்ணுள்ள சுவை மிகுந்து தோன்ருது குறைந்தே காணப்படுகின்றது. அதுபோல, உரையும் ஒரு வரம்பின்கட் படாது சொற் பெருக்கமுற்று நடைபெறுதலால் அதன்கட் புதைந்த பொருளும் ஆழமாகலின்றி அச் சொற்களோடு ஒத்து ஒழுகி மெல்லிதாய் விடுகின்றது. மற்றுக் காய்ச்சித் திரட்டிய பாற்கட்டியும் சருக்கரைக் கட்டியும் இறுகித் திண்ணென்ற உருவுடைய வாயிருத்தலின் அவற்றின்கட் சுவை மிகமுதிர்ந்து தோன்ரு நிற்கின்றது. அதுபோல, செய்யுளும் எழுத்து அசை, சீர், தளே, அடி, தொடைகளான் அமைந்த பாவாய் ஒரு வரம்புட்பட்டுச் சொற்சுருக்க முடைத்தாய் நடத்தலின் அதன்கட் புதைந்த பொருளும் அவற்ருேடு ஒப்ப ஒழுகித் திட்பமும் ஆழமும் உடையதாகின்றது. பாட்டெல்லாம் அறிவு நிலையைப் பற்றிக்கொண்டு. போய் உயிர்களின் உணர்வு நிலையை எழுப்பி விடுவதாகும், உரையெல்லாம் அறிவு நிலையைப்பற்றியே நிகழுமல்லது அதன்மேற் சென்று உணர்வு நிலையைத் தொடமாட்டா தாகும்.

பெரியதோர் மலேமுழைஞ்சினுட் பொன்னும் மணியும் சிதறிக் கிடத்தல் ஒரு வியப்பன்று : ஒரு சிறு கற்பிளவிலே அரிய பெரிய முழு மணிகள் அடுக்கடுக்காய்க் கிடந்து எடுக்குந்தோறும் குறைபடாதிருத்தலே பெரிதும் வியக்கற் பாலதாகும். சிறிய வான்மீன்கள் அகன்ற அவ்வானத்திற். காணப்படுதல் ஒரு வியப்பன்று ; அவ்வகன்ற வானும் வேறு மாடமாளிகை கூடகோபுரங்களும் ஒரு சிறிய கண்ணுடியினுட் காணப்படுதலே மிகவும் வியக்கற்பாலதாம். அதுபோல, பெரிய ஒர் உரையிலே சில பொரு