பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 தமிழ் பயிற்றும் முறை

மாணிக்கவாசகப் பெருமான் திருச்சிற்றம்பலக் கோவை. யாரில்,

சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்ப லத்தும்என்

சிந்தையுள்ளும்

உறைவான் உயர்மதிற் கூடலி னுய்ந்தவொண்

டீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனையோ? அன்றி யேழிசைச்

சூழல்புக்கோ ?

இறைவா! தடவரைத்தோட் கென்கொ லாம்புகுந்

தெய்தியதே ?

என்று திருவாய் மலர்ந்தருளினர். இப்பெற்றித்தான இசை, தானேயும் இன்புறுத்துகின்ற பாட்டோடும் சேருமாயின் அவை யிரண்டின் கலப்பால் தோன்றும் இன்பம் இவ் வியல்பிற்றென்று குறித்துரைக்கல் ஏலுமோ? எனவே, இசையோடு பிணேந்தியங்கும் பாட்டிற்கும் அஃதின்றி யியங்கும் உரைக்கும் உள்ள வேறுபாடும், இவ்விரண்டில் முன்னேயது பயன் பெரி துடைத்தாதலும் பின்னேயது பயன் சிறிதே யுடைத்தாதலும் தெற்றென விளங்கா நிற்கும். அற்றன்று, உரை நூல்களும் ஒரோவழி வியப்புணர்வு தரக் காண்டுமாகலின் அதனைச் செய்யுளுக்கே வரைந்து கூறியது பொருந்தாதாம் பிறவெனின் நன்று கடாயினுய், ஒரோவோ ருரைநூல்களின் இடையிடையே பாட்டிற்குரிய சொல் நயம் பொருள் நயங்கள் காணப்படுதலால் அங்ங்னம் அவ் வியப்புணர்வு தோன்றிற்ருகலின் அதுபற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லையென்பது. இப் பெற்றிப்பட்ட உரைப்பகுதிகள் சில ஆசிரியர் நக்கீரனர் களவியலுரையி. னிடையிடையே காணப்படும் ; அவைகொண்டு இவ் வுண்மை அறியற்பாற்ரும்.’’ "

1 &

மறைமலையடிகள் : பட்டினப்பாலை ஆராய்ச்சி (பக்.5-10)