பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 443:

கவிதை கற்பித்தல்:

தாய்மொழிக் கல்வியில் கவிதையே உயிர்நிலையான பகுதி. கவிஞர்கள் தம் வாழ்க்கை நுகர்வுகளிலிருந்தும், பட்டறிவிலிருந்தும் எழும் உணர்ச்சிகளையும் உயர் கருத்துக்களையும் ஓசை இனிமை, சொல் நயம், பொருள் நயம் ஆகிய பண்புகள் நிறைந்த சொல்லோவியங்களால் வெளிப்படுத்துவர். நுண்கலைகளில் கவிதை சிறந்த இடம் பெறுகின்றது. பண்டைத் தமிழறிஞர்கள் தம் மதிநுட்பத்தால் நுனித்தறிந்து வெளியிட்ட அறிவுச் செல்வங்கள் யாவும் பாவடிவிலேயே உள்ளன. தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை நடை வேறுபாடுகளைக் கவிதைகளில்தான் காணலாம். ஒன்பான் சுவைகளும், பத்து வகை அழகுகளும் இறைச்சி உள்ளுறை யுவமம் போன்ற சிறந்த அணிகளும், பிற அணிகளும் பாக்களில்தான் சிறந்து காணப்படும். படிப்போர் மனத்தை ஈர்ப்பதற்குரிய ஓசை நயம், பொருவரினிமை, சுருங்கிய பண்பு, செறிவு முதலியவை பாக்களின் சிறந்த கூறுகள். இளமையிலிருந்தே மாணுக்கர்கட்குக் கவிதை கற்பித்தலே மேற்கொள்ள வேண்டும்.

கவிதை கற்பித்தலின் நோக்கங்கள்: கவிதைகளின் உயிர் நிலைக்கருத்தை உணர்ந்து அவற்றை யாத்த கவிஞனின் கருத்துக்கள், உணர்ச்சிகள் முதலியவற்றையும் அவன். கண்ட இயற்கை எழில்கள், மக்கள் மனப்பான்மை, இதயப் பாங்கு முதலியவற்றையும் மாணுக்கர்கள் அறியச் செய்தலே. சிறந்த நோக்கமாகக் கொள்ளுதல் வேண்டும். மாணுக்கர்களின் சொற்களஞ்சியத்தைப் பெருக்குவதற் கென்ருே, மொழியறிவு வளர்ச்சிக் கென்ருே, கருத்துக்களே வெளியிடும் திறன்களை வளர்ப்பதற்கென்ருே கவிதையைக் கற்பித்தல் கூடாது. கவிதைகள், பல வாழ்க்கை உண்மைகளை அழகு பொருந்த எடுத்துரைக்கின்றன. அவ்வாறு கவிஞன் எடுத்துரைக்கும் பெற்றியை மாணுக்கர்கள் உணரும்படி செய்து * முழு விவரங்களையும் இவ்வாசிரியரின் கவிதையனுபவம் (கழக வெளியீடு) என்ற நூலில் கண்டுகொள்க.