பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.444 தமிழ் பயிற்றும் முறை

விட்டால் தமிழாசிரியர்களின் தொண்டு ஓர் எல்லையை எய்திவிட்டது என்று கருதலாம் , தமிழ் பயிலும் மானுக்கர்களும் கல்வியின் பயனே ஓரளவு அடைந்து விட்டனர் என்றும் தீர்மானிக்கலாம். ஒரு கவிஞனின் எந்த மன எழுச்சிகளும் கற்பனை ஆற்றலும் கவிதை பிறக்கக் காரணமாக இருந்தனவோ, அதே மன எழுச்சிகளேயும் கற்பனைகளேயும் மானுக்கர்களிடம் உண்டு பண்ணுமாறு கவிதை கற்பிக்கப்பெறுதல் வேண்டும். கவிதையைப் படித்து நுகர்தலே ஒரு தனிப்பட்ட இன்பம் ஆகும். பேரறிஞர்களின் சொல்லோவியங்களைப் படித்துத் துய்க்கும்பொழுது அவர்கள் வருணிக்கும் காட்சிகள் நம் மனத்திரையில் நன்குபடியும்; அவர்கள் குறிப்பிடும் உணர்ச்சிகள் நம் இதயத்தைக் கிளர்ச்சி செய்யும். கவிதைகளைக் கவிஞனின் மனப். போக்கை யொட்டி அவனுடன் கலந்து பாடுங்கால் இராமலிங்க வள்ளல் கூறியவாறு நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து செழுங்கனி தீஞ்சுவை கலந்து, ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதை அறியலாம். இவ்வாறு கலந்து பாடி இன்பத்தை நுகர்தல் வாழ்க்கையையே பண்படுத்தி மக்கட் பண்பை வளர்க்கும் தன்மையை எய்துவிக்கும். அன்றியும், கவிதைகள் கற்போரின் கற்பனையை வளப்படுத்தி, அவர்களிடம் தனிவீறு (individuality) என்ற பண்பை வளர்த்து அவர்கள் ஒழுக்கத்தையும் சீர்ப்படுத்துகின்றன என்றும் சொல்லலாம். இக்கூறியவற்ருல் கவிதை கற்பித்தலின் இன்றியமையாமையையும் நோக்கத்தையும் ஒருவாறு அறியலாம்.

கவிதைகளைத் தேர்ந்தெடுத்தல் : இன்று அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த மாதிரி குறுகிய காலத்தில் சிறிதும் சிந்தனேயின்றி ஒரு சில ஆசிரியர்களால் ஒரு நெருக் கடியில் எழுதப்பெற்றுப் பாடப்புத்தகக் குழுவிற்கு அனுப்பவேண்டிய நாள் நெருங்கி விட்டதே என்ற கவலையால் * கன்னுபின்ன என்று அச்சிடப்பெற்று வெளிவரும் பாடப் புத்தகங்களில் காணப்பெறும் கவிதைகள் மாணுக்கர்களின் மனநிலைக்கும் உளச்சுவைக்கும் ஏற்றனவாக இல்லே என்