பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2446 தமிழ் பயிற்றும் முறை

ஆட்டப்பாடல்கள், செவிலிப்பாடல்கள், கதைப்பாடல்கள், விடுகதைகள் முதலியவைகளே அவர்களின் மனநிலைக்கு ஏற்றனவாகக் கொள்ளலாம். அவற்றை அவர்கள் எளிதில் படிக்கக்கூடியவாறு சொற்பிரிவு செய்து, பெரிய எழுத்துக்களில் அழகான தாளில் அச்சிட்டு வழங்க வேண்டும். சிறுவர்கட்குப் புத்தகம் எழுதுவோர். இதில் அதிகக் கவனம் கொள்ளவேண்டும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளே அவர்களின் பாடல்கள், சுத்தானந்தபாரதியாரின் பாடல்கள், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பாடல்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்டுள்ள குழந்தைப் பாடல்கள் போன்றவை குழந்தைகட்கு ஏற்றவை. இவற்றைத் தவிர, அவ்வப்பொழுது சிறுவர் பகுதியில் கலைமகள், ஆனந்த விகடன், அமுதசுரபி, தினமணிக் கதிர், தமிழ்நாடு-ஞாயிறு மலர் போன்ற பருவ இதழ்களில் வெளிவரும் பாடல்களையும் கண்ணன், கற்கண்டு, பூஞ்சோலை, அம்புலிமாமா முதலிய குழந்தை மலர்களில் வரும் பாடல். களையும் இளஞ்சிருர்களுக்குக் கற்பிக்கும் மொழியாசிரியர்கள் தொகுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்று தொடக்கநிலைப் பள்ளிகளில் கவிதைப்பாடங். களில் மிகுதியாக மூதுரை, உலகநீதி, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நன்னெறி, நல்வழி, நீதிநெறி விளக்கம் போன்ற அறநெறிப் பாடல்களே மிகுதியாகக் கற்பிக்கப்பெறுகின்றன. தொடக்கநிலைவகுப்புகளுக்கென வெளிவரும் பாடப் புத்தகங்களிலும் இப்பாடல்களே மிகுதியாகக் காணப் படுகின்றன. "நல்வழியும் நன்னெறியும் அறியும் பருவம் எய்தப்பெருத இளஞ்சிருர்களுக்கு குருவித்தலையில் பனங் காயை கட்டிவைத்த மாதிரி அப்பாடல்களைக் கற்பித்தலால் யாது பயன்? அவர்களுக்குத் தெரிந்த சொற்களும் பொருள்களும் மிகக் குறைவாகவுள்ள இளம் பருவத்தில் அவற்றை அறிந்து கொள்ள இயலுமா? உளவியல் முறைக்குச் சிறிதும் ஒவ்வாத இம்முறை விரைவில் மாறவேண்டும். பாடப்புத்த கங்களைக் கையாலும் தொட விரும்பாத குழந்தை 'கண் ணனை'யும் கற்கண்டையும் பூஞ்சோலையையும் அம்புலி மாமாவையும் ஆர்வத்துடன் படிப்பதிலிருந்தாவது கற்பிக்