பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 தமிழ் பயிற்றும் முறை

நாட்டுப் பற்றின் முதிர்ச்சியால் விடுதலையடைந்த மக்கள் மொழிப்பற்ருல் திகழ்வதைக் காண்கின்ருேம்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவ தெங்கும் காணுேம்

என்ற பாரதியின் குரல் தமிழர்களிடம் தமிழ்ப்பற்றினேத் தூண்டியிருக்கின்றது. தமிழ் இலக்கியங்களே நன்கு சுவைத்த பாரதிதாசன் கன்னல் பொருள்தரும் தமிழே 露” ஓர், பூக்காடு ; நாளுேர் தும்பி!” என்று கூறுகின்ருர்.

தாய்மொழி இலக்கியங்கள் நாட்டுப்பற்றையும் 2-6örー டாக்கும். தமிழின் ஆணை நிலவிய பாண்டி நாட்டிற்கு வணக்கம் தெரிவிக்கும் பாடல் ஒன்றில் இந்நாட்டுப் பற்று. வெளியாகின்றது.

ஆவியந் தென்றல் வெற்பின்

அகத்தியன் விரும்பும் தென்பால் நாவலந் தீவம் போற்றி

நாவலந் தீவந் தன்னுள் மூவர்க்கும் அரியான் நிற்ப

முத்தமிழ் தெய்வச் சங்கப் பாவலர் வீற்றி ருக்கும்

பாண்டிநன் டுை போற்றி.'

என்பது கவிஞரின் வாக்கு, தருமியின் பொருட்டு வாதாட வந்தபொழுது சிவபெருமான் நிற்கவும், சங்கப் புலவர்க ளெல்லாம் வீற்றிருக்கவும் செய்தது தமிழல்லவா ? கம்பர், சேக்கிழார் போன்ற பெருங் கவிஞர்களின் இலக்கியங்களில் இத்தகைய பாடல்கள் பல உள்ளன. கனிந்த நாட்டுப் பற்ருகிய அமுதக் கடலில் தோன்றிய பாரதியாரின் பாட்டுக்கள் நாட்டுப்பற்றை என்றும் வற்ருது சுரந்து: நிற்கும் ஊற்றுக்களாகத் திகழ்கின்றன.

17 வேம்பத்துரார் திருவிளையாடல்