பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 தமிழ் பயிற்றும் முறை

கவிதை கற்பிக்கும் ஆசிரியர்கள் : செய்யுள் கற்பிக்கும் நோக்கங்கள் செவ்வனே நிறைவேற வேண்டுமாயின் கற்பிக்கும் ஆசிரியர்கள் கவிதை இன்பம் துய்ப்போர். களாக இருத்தல்வேண்டும். கவிதையை உணர்ந்தால். தான் பிறர்க்கு அவற்றை நன்கு உணர்த்த முடியும். ஒரு சில மாணுக்கர்கள் கவிதைகளின் முருகுணர்ச்சியில் தாமா. கவே ஈடுபட்டுத் திளேக்கக்கூடும். ஆணுல், பெரும்பா. லோர்க்கு அஃது இயலாத தொன்று ; அவர்கட்கு ஆசிரியர் உணர்த்தினுல்தான், அவர்கள் கவிதையின்பத்தில் ஈடுபட முடியும். கற்பிக்கப்போகும் கவிதையின் உட்கிடக்கைப் புல குைமாறு விறுவிறுப்பான ஒரு சூழ்நிலையை உண்டாக்கிப் பின் அதன் துணையினைக் கொண்டு கவிதையின் உணர்ச் சியை மாணுக்கர்கள் உணரும்படி செய்தல்வேண்டும்.

கேட்டான் இளையோன் கிளர்ஞாலம் வரத்தி ளுலே மீட்டாள் அளித்தாள் வனந்தம்முனை வெம்மை முற்றத் தீட்டாத வேற்கண் சிறுதாயென யாவ ராலும் மூட்டாத காலக் கடைத்தியென மூண்டெழுந்தான். கண்ணிற் கடைத்தியுக நெற்றியிற் கற்றை நாற விண்ணிற் சுடருங்கெட மெய்யினில் நீர்வி ரிப்ப உண்ணிற்கும் உயிர்ப்பெனும் ஊதை பிறங்க நின்ற அண்ணற் பெரியோன் தனதாதியின் மூர்த்தி யொத்தான். சிங்கக் குருளைக்கிடு தீஞ்சுவை ஊனை நாயின் வெங்கட் சிறுகுட்டனை யூட்ட விரும்பி குளே நங்கைக் கறிவின்றிறம் நன்றிது நன்றி தென் ளுக் கங்கைக் கிறைவன் கமலக்கை புடைத்து நக்கான்.' என்ற பாக்களைக் கற்பிக்கும்பொழுது இராம இலக்குவரது சகோதரவாஞ்சை, இராமன் முடிசூட்டுதலுக்கு ஏற்பட்ட தடை, அதற்குரிய காரணம் ஆகியவற்றை விறுவிறுப்பான சொற்களில் சுருங்கக் கூறியும், இலக்குவனது சீற்றற்திற். குக் காரணங்காட்டியும் பாக்களே உணர்ச்சியுடன் படித்தால் மாளுக்கர்கள் உணர்ச்சி வயத்தராகி அவற்றை நன்கு சுவைப்பர் ; வெகுளிச் சுவையிலும் திளைப்பர்.

18 அயோத்-நகர் நீங் - 115, 116, 117.