பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 தமிழ் பயிற்றும் முறை

முறைகளைக் கையாண்டு மானுக்கரின் காலத்தையும் உற்சாகத்தையும் கெடுப்பதைவிட நேரடியாகக் கவிதையில் புகுவதே சரியான முறையாகும். சில சமயம் விழாக்கடிட்டங்களில் தலைவராயிருக்கும் உள்ளுர்ப் பெரியார் முக்கியமான வெளியூர்ச் சொற்பொழிவாளரை அறிமுகப்படுத்தும். பொழுது வேண்டாதவற்றை யெல்லாம் கூறி விண் காலத்தைப் போக்கும்பொழுது கேட்போர் தலைவர்மீது வெறுப்புக் காட்டி விரைவில் அவர் பேச்சை முடித்துப் பேச்சாளரைப் பேச விடவேண்டு மென்று விழைவதை தாம் அடிக்கடி பார்த்திருக்கின்ருேம். அதுபோலவே, கவிஞன் கூறுவதற்குத் தடையாக நின்றுகொண்டு ஆசிரியர் வேண்டாத வெற்றுரை பகர்ந்து கொண்டிருப்பதை விட, பாடலுக்குள் நுழைந்து கவிஞனேயே பேசவிடுதல் நன்று. கற்பிக்கப்போகும் கவிதையின் முழுக்கருத்தையும் அழகையும் எடுத்துக்காட்டுவதற்காக உதவும் சாதனங்களே அவ்வப்பொழுது வேண்டுங்கால் கையாளவேண்டுமே. யன்றி, பாடத்திற்கு அவற்றை முன்னுரையாகக் கொள்வது தவறு. எனினும், நடைமுறையிலுள்ள ஒரு சில முறைகளை ஈண்டு ஒரு சிறிது ஆராய்வோம். சிறந்த தொடக்கம் வேலை. முடிவின் பாதியல்லவா ? அன்றியும், அவை கற்பிக்கும் துறையில் புதிதாக நுழைவார்க்கு வழிகாட்டியாகவும் அமைதல்கூடும்.

(1) கவிஞன் வரலாறு கூறித் தொடங்கும் முறை : பட்டறிவுடைய ஆசிரியர்களாயினும் சரி, பயிற்றல் துறைக்கும் புதியவர்களாயினும் சரி, பெரும்பாலும் இன்று அவர்களால் இம் முறை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது சிறிதும் பொருத்தமற்ற முறை பாடலேக் கற்பித்த பிறகு, பாடலின் பொருளும் சுவையும் மாணுக்கர்கட்கு விளக்கம் பெருதிருந்தால், ஆசிரியர், அப்பாடல்களே எழுதுவதற்குக் கவிஞனுக்கு நேரிட்ட சூழ்நிலையைக் கூறலாம். அப்பொழுதும் கவிஞனேப் பெற்ற தாய் தந்தையர், கவிஞன் பிறந்த ஊர் முதலிய வேண்டாத விவரங்களேயெல் லாம் கூறிப் பாடலின் சுவையைக் கெடுக்க வேண்டியதில்லை. ஈடில் பாடிய சந்தர்ப்பத்தை விளக்கும் அளவுக்கு வரலாறு: