பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 453

கூறினுல் போதுமானது ; அதுதான் பாடலின் பொருளே விளக்கத் துணை செய்யும். காவியப் பகுதியாக இருந்தால், அப்பாடல் வரும் கதையின் இடத்தைச் சுட்டும் அளவிற்குக் கதை வரலாறு உரைத்தால் போதும். அடியைப் பிடிடா, பாரத பட்டா என்ருற்போல் கதையைத் தொடக்கத்திலிருந்து கூற வேண்டிய அவசியமில்லை. மேலே குறிப்பிட்ட பேச்சாளருக்கும் கேட்போருக்கும் இடையில் தடையாக நிற்கும் விழாத் தலைவர்போல் கவிஞனுக்கும் மாணுக்கர்கட்கும் இடையில் ஆசிரியர் தடையாக நின்று அவர் காலத்தை வீணுக்கத் தேவையில்லை. எவ்வளவுக் கெவ்வளவு விரைவாகப் பாடலுக்குள் நுழைய முடியுமோ அவ்வளவுக் கவ்வளவு விரைவாக நுழைந்து விடவேண்டும்; மானுக்கர்கட்குச் சலிப்பை உண்டாக்கும் அளவுக்கு முகவுரைகூறிப் பாடத்தை முடிப்பதற்குக் காலம்போதாதபடி செய்து விடக்கூடாது. ஒரு சில தனிப் பாடல்கள், காளமேகப் புலவர் யமகண்டம் பாடியபொழுது பாடிய சிலேடைச் செய்யுட்கள் முதலியவற்றைக் கற்பிக்க நேரிடுங்கால் ஒரோ வழி இம்முறையை மேற்கொள்ளலாம். கவிஞன் வரலாறு கூறுதல் எவ்விதத்திலும் கவிதை கற்பித்தல் ஆகாது என்பதை மட்டிலும் ஆசிரியர் என்றும் நினேவில் இருத்த வேண்டும். கவிதை கற்பிக்க வேண்டிய நேரத்தில் கவிஞன் வரலாற்றிற்குச் சிறிதும் இடமே இல்லை. கவிதைச் சுவைக்கு கவிஞன் வரலாறு துணைபுரியுமாயின் அதை ஓர் உறுப்பாகக் கொள்ளலாம்; அதையும் வேண்டுமளவிற்குத்தான் கையாள

வேண்டும்.

(2) விளக்க முறை : இது பல்வேறு வடிவங்களில் கையாளப்படுகின்றது. ஒரு சில ஆசிரியர்கள் தாம் கற்பிக்கப்போகும் கவிதையில் வரும் கடின சொற்களைக் கரும்பலகையில் எழுதிக் காட்டிவிட்டு கவிதையைக் கற்பிக்கத் தொடங்குகின்றனர். சந்தர்ப்பத்திற்குப் பொருந்தாத முறையில் இவ்வாறு சொற்களைத் தனியாகப் பிரிப்பதால் அச்சொற்கள் இரட்டிப்புக் கடினமாகி விடுவதைத் தவிர வேருெரு பலனும் ஏற்படாது. சொற்கள் தனிப்பட்ட முறையில் உணர்த்தும் பொருள் வேறு ; அவை கலந்து