பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 தமிழ் பயிற்றும் முறை

இடத்தை யொட்டித் தன் ஒசை வன்மையாலும் பொருள் தன்மையாலும் புதியதொரு கருத்தைப் பிறப்பிக்கும் திலே வேறு. தனிப்பட்ட முறையில் அவற்றிற்கு என்றுமே இராத ஒரு பொருட் சிறப்பு ஏற்பட்டு விடுகின்றது. நாணயங்களைப் போல் பழகிப்பழகி உருவழிந்து மெருகேறிப்போன சொற்கள் கவிதையில் வரும்பொழுது உயர் பதவியைப் பெறுகின்றன ; ஆற்றலேயும் அடைகின்றன. அதனுல் அவற்றின் வலுவும் வேகமும் அதிகரிக்கின்றன. அரங்கு கீறி வட்டாடுங்கால் சதுரங்கக் காய்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் உலவும்பொழுது எப்படிப் புதிய ஆற்றலைப் பெறுகின்றனவோ, அதுபோலவே கவிஞன் யாப்பு முறையில் சொற்களைக் கையாளும்பொழுது அவை புதிய ஆற்றலைப் பெறுகின்றன. தனியாக இருக்கும் குண்டுகளின் தன்மை வேறு : துப்பாக்கிக்குள் வைக்கப்பெற்றிருக்கும் குண்டுகளின் தன்மை வேறு. அதுபோலத்தான் தனிச் சொற்களின் பொருள் வேறு ; கவிதைக்குள்ளிருக்கும் சொற்களின் பொருள் வேறு. வேகமும் அப்படித்தான்.

" அண்ணலும் நோக்கினன்; அவளும் நோக்கினுள்.' என்ற அடியில் வரும் நோக்கு என்ற சொல்லின் பொருளை நாம் நன்கு அறிவோம்.

கண்ணுெடு கண்ணினை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. என்ற குறளால் நோக்கு என்ற சொல்லின் எண்ணத்தைத் தோற்றுவிக்கும் ஆற்றல் தெரிவிக்கப் படுகின்றதல்லவா? பார்த்து, கண்டு, விளித்து என்ற சொற்களைப் போலத்தான் * நோக்கி’ என்ற சொல்லும் என்று நினைப்பது தவறு : * நோக்கி என்பதற்குத் தனிவீறு உண்டு. இக்குறளே நினைந்து மேற்காட்டிய அடியிலுள்ள நோக்கி என்ற சொல்லின் பொருளை அறியும்பொழுதுதான் அத் தனிவன்மையை அறிகின்ருேம். கவிதையில் வரும் சொற்களின் தன்மை இவ்வாறிருக்க அவற்றைத் தனியாக எடுத்தெழுதுவதால்

  • பாலகா-மிதிஅல-35 ' குறள்-1100