பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்மொழியைப் பயிற்றும் நோக்கங்கள் 33

செந்தமிழ் நாடென்னும் போதினிலே-இன் பத் தேன்வந்து பாயுது காதினிலே . .

என்ற அடிகளுக்கு ஈடானவை எந்த மொழியிலாவது இருக்க முடியுமா ?

அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே • 18

என்று இலக்கணம் வகுத்த பெருமை தமிழ்மொழிக்குத் தான் உண்டு. நல்லொழுக்கமும் கடவுள் அன்புமே கல்வியின் கனிந்த பயன்கள் என்று கொண்ட பெருமை தமிழ் மறைக்குத்திான் உண்டு. :

கற்க கசடறக் கற்பவை ; கற்றபின் நிற்க அதற்குத் தக."

கற்ற தல்ை ஆய பயன் என்கொல், வாலறிவன் நல்தாள் தொழாரெனின் ???

என்பன போன்ற மறைமொழிகள் மாணுக்கர் கட்குக் கல்வியின் முடிந்த நோக்கத்தை உணர்த்தி அவர்கள் வாழ்வைச் செழிக்கச் செய்கின்றன. தமிழ் மொழியில் அறநூல்களுக்கும் இறை வழிபாட்டு நூல்களுக்கும் குறைவே இல்லே; வாழ்க்கையின் பல்வேறு உண்மைகளைக் கதைவடிவில் வைத்துக் காட்டக் கூடிய காவியங்களும் பல உள்ளன. நேரடியாக நீதியைப் புகட்டும் பாக்களைத் தவிர மறைமுகமாக நீதி கூறும் கவிதைகளையும் ஏராளமாகக் காணலாம்.

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஒம்புமின் ; அதுதான் எல்லாரும் உவப்பது அன்றியும் நல்லாற்றுப் படுஉ நெறியுமா ரதுவே." என்பன போன்ற அடிகள் மக்களாகப் பிறந்த அனைவருக்குமே சிறந்ததோர் ஒழுக்கத்தைப் புகட்டும் அறவுரையாக

நன்னூல்-நூற். 10. குறள்-391. குறள்-2. 21 புறம்-195.