பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 457

கடினம். இவை யெல்லாம் சில கடினமான பாடல்களுக்குக் கையாளப்பெறும் முறைகளாகும்.

மேற்கூறிய கடினமான பாக்களைத் தவிர ஏனைய பாக்களே மாணுக்கர்கட்குக் கற்பிக்கும்பொழுதெல்லாம் கவிஞனேயே பேசும்படி விட்டுவிடுதல் வேண்டும். கவி. ஞனேவிட யார்தான் அவன் கூறும் உணர்ச்சி வெள்ளத்தை, அழகோவியத்தை, இதயப் பாங்கைத் தெளிவாகக் காட்ட இயலும் ? கவிஞன் குரலில் அவன் இதய பாவத்தை உணர்ந்து ஆசிரியர் பாடலே இசையூட்டிப் படிக்கும்பொழுது, கட்டாயம் மாணுக்கர் அதைச் சுவைப்பர்; சுவையின் உச்சியை எட்டிப் பிடிக்கவும் செய்வர். அடியிற்கானும் பாடல்கள் போன்றவைகட்கு எவ்வித விளக்கமும் தேவையில்லை.

நாடிப் புலங்கள் உழுவார் கரமும்

நயவுரைகள் - தேடிக் கொழிக்கும் கவிவாணர் நாவுஞ்

செழுங்கருணை ஓடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும்

உவந்து நடம் ஆடிக் களிக்கும் மயிலே உன் பாதம்

அடைக்கலமே.”*

இது கவிமணியின் கலைமகள் வணக்கம்.

தெளிவுறவே யறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல்,

சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல

காட்டல், கண்ணிர்த் - துளிவரவுள் ளுருக்குதல், இங்கிவையெல்லாம் நீயருளுந்

தொழில்க ளன்ருே ? ஒளிவளரும் தமிழ்வாணி! அடியனேற் கிவையனைத்தும்

உதவு வாயே..”*

21. கவிமணி: மலரும் மாலையும் பாரதி: பாஞ்சாலி சபதம்-154.