பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 தமிழ் பயிற்றும் முறை

இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென இயல்நூலார்

இசைத்தல் கேட்டோம் ; இடையின்றிக் கதிர்களெலாம் சுழலுமென வானூலார்

இயம்பு கின்ருர் , இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப் பொருட்

இயற்கை யாயின் (கெல்லாம்

இடையின்றிக் கலைமகளே நின தருளில் என துள்ளம்

- இயங்கொ ளுதோ ???

இவை இரண்டும் பாரதியாரின் கலைமகள் வணக்கங்கள்.

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்;

கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்; அந்தச் சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்

தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்; மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற

மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள். ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டத்

தனில் அந்த அழகென்'.பாள் கவிதை தந்தாள்.

சிறுகுழந்தை விழியினில்ே ஒளியாய் நின்ருள்; திருவிளக்கிற் சிரிக்கின்ருள் ; நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வ அளவில்

நாடகத்தைச் செய்கின்ருள் அடடே செந்தோட் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்

புதுநடையில் பூரித்தாள் ; விளைந்த நன்செய் நிறத்தினிலே என் விழியை நிறுத்தி ளுள்;என்

நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.'

இவை இரண்டும் அழகைப்பற்றிப் பாரதிதாசன் புனேந்த கவிதைகள். இத்தகைய எளிய இனிய கவிதைகளைத் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், திருவருட்பா ஆகிய நூல்களிலும் காணலாம். இப்பாடல்களே இசையூட்டிப் பாடினலே போதும்; மாணுக்கர்கள் கவிதைச் பாரதி : பாஞ்சாலி சபதம்-206, பாரதிதாசன் : அழகின் சிரிப்பு: அழகு 1, 2.