பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 தமிழ் பயிற்றும் முறை

வயதில் இயற்கை யெய்திய’ கவிமணி பண்டிதமணி இறந்த சமயம் ஆஸ்த்மா நோயாலும் சிறு சிரங்கு நோயா லும் பிடிக்கப்பட்டிருந்தார். பொதுவாகச் சைவசமயப் பற்றும் சிறப்பாகத் தில்லைக்கூத்தன்பால் ஈடுபாடுங்கொண்ட பண்டிதமணியின் பிரிவைக் கண்டு அவரது கெழுதகை நண்பரும் மரணத்தை ஒவ்வொரு நிமிடமும் எதிர் நோக்கிக்கொண்டு இருந்தவருமான கவிமணி மேற்கண்ட பாடலைப் பாடினர். கவிமணியும் நிறைந்த இறையன் பு கொண்டவர்.” இந்த முகவுரைக்குப் பின் மேற்கண்ட பாடலை இசையுடன் நிறுத்திப் பல முறை படித்தால்-இல்லை பாடினுல்-மாணுக்கர்கள்,

என்று வருவான் எமனென் றெதிர்நோக்கி

நின்று தளர்கின்றேன் நித்தமுமே என்ற அடிகளின் பாவத்தை, அதில் பொதிந்துள்ள நோய்த் துன்பத்தை, நன்கு அறியமுடியும் செத்தார் ஒருவரை நோக்கிச் சாவார் ஒருவர் காட்டும் இதயத் துடிப்பை, உணர்ச்சிப் பெருக்கை, உணரமுடியும். இவ்வாறு பல எடுத்துக்காட்டுக்கள் தரலாம். காவியப் பகுதிகளிலிருந்தும் பல எடுத்துக்காட்டுக்களைக் காட்டலாம்.

(4) விமுைறை : இதைப் பேராசிரியர் ஹாடோ (Haddow) “ Glåröääß (psop' (Synthetic method) என்று வழங்குவர். இம் முறையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மாளுக்கர்களிடையே * விளுமாரிகளை’ப் பொழிந்து கவிதைகளே மாளுக்கர்களிடமிருந்து வருவிக்க முயல்வர். பெரும்புலமை படைத்த கம்பன் போன்ற மேதைகள் எங்கே? மொழியறிவு, பொருளறிவு, கற்பன யாற்றல் முதலியவை வாய்க்கப்பெருத இளம் மாளுக்கக்களெங்கே? பெரும் புலவர்களின் கவிதையை இளஞ் சிருர்களிடமிருந்து வருவிக்க இயலுமா? அஃது அவர்களிடம் இருக்கத்தான் முடியுமா ? அல்லது, கற்பிக்கும் ஆசிரியரிடந்தான் இருக்க முடியுமா ? அவர் விடுக்கும்

  • இயற்கை எய்தியது 26-9-54-ஆம் நாள் பிற்பகலில்.