பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 தமிழ் பயிற்றும் முறை

ஒவியத்திலுள்ள கோடுகளே யன்றி ஒவியம் ஆகாது. ஒவ்வொரு கோட்டின் அழகும் அஃது ஒவியத்தைச் சிறந்த கலையாக்கும் திறனேப் பொறுத்துள்ளது ; கோட்டிற்கெனத் தனி அழகு ஒன்றும் இல்லே. நம் இலக்கியங்களிலிருந்து எத்தனையோ சிறந்த கருத்துக்களே, நீதிகளே, உணர்த்தக் கூடிய தனிச் சொற்ருெடர்களை எடுத்துக் காட்டலாம். காட்டி என்ன பயன்? அவற்றை அவை கூறும் சந்தர்ப்பங்களிலிருந்து பிரித்தெடுத்து விட்டால், அவற்றின் அழகும் குலைந்துவிடும் ; உணர்ச்சியும் சப்பிட்டுப் போகும் ; . அச் சொற்ருெடர்கள் கவிதையில் சேர்ந்திருக்கும்பொழுதுதான் அழகுடன் பொலிவுறும்.

கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன

பொருளெனப் போயிற் றன்றே’’’’

" எடுத்தது கண்டனர் ; இற்றது கேட்டார் ’’’’

என்பன போன்ற சொற்ருெடர்களைக் கம்பராமாயணச் சுவைஞர்கள் அடிக்கடி எடுத்துச் சொல்லி மகிழ்வர் ; அவற்றைக் கவிதையின் கொடுமுடிகள் என்றும் எடுத்துக் காட்டுவர். கவிதை கூறும் சந்தர்ப்பங்களே அறியாதவர்கள் அவற்றைச் சுவைக்க முடியுமா ? அச் சந்தர்ப்பங்களின்றி அவற்றிற்குப் பொருள்தான் உண்டா ? இத்தகைய எண்ணற்ற தொடர்களே தமிழ் இலக்கியக் கருவூலத்திலிருந்து எத்தனே வேண்டுமானுலும் எடுத்துக்காட்டலாம்.

எனவே, மாணுக்கர்களிடம் முருகுணர்ச்சியை வளர்க்க வேண்டுமாயின், அவர்களிடம் கவிஞன் படைத்த கவிதையைக் காட்டவேண்டும் : அச்சு வடிவத்திலுள்ள சொற். ருெடர்களைக் காட்டினல் மட்டிலும் போதாது. ஆசிரியர் கவிதையைச் சுவைத்திருந்தால், அதை இசையூட்டி மாளுக்கர்களின் உளத்திற்குக் கொண்டுசெலுத்தமுடியும். “ கவிதையை மாணுக்கர்கள் உணரச் செய்யவேண்டும் ;

29.பால-தாடகை வதை-71. பால--கார்முக-34

தி 态 {ք